background img

புதிய வரவு

கடப்பா தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக 56 பேர் மனு

ஆந்திராவில் கடப்பா எம்.பி. தொகுதி, புலிவெந்துலா சட்டசபை தொகுதிகளுக்கு மே மாதம் 8-ந் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. கடப்பாவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும், புலிவெந்துலா தொகுதியில் அவரது தாயார் விஜயலட்சுமியும் போட்டியிடுகிறார்கள்.

இருவரையும் தோற்கடிப்பதில் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஜெகன்மோகன் ரெட்டி போட்டியிடும் கடப்பா தொகுதியில் நேற்று மனு தாக்கல் முடிந்தது. இதில் ஜெகன் மோகனை எதிர்த்து 56 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

புலிவெந்துலாவில் 36 பேர் போட்டியிடுகிறார்கள். கடப்பாவில் ஜெகன் மோகன் ரெட்டி பெயருடைய 11 பேர் களத்தில் உள்ளனர். இவர்களை காங்கிரஸ்தான் களம் இறக்கி உள்ளது. இதன் மூலம் வாக்காளர்களை நன்றாக குழப்பி விட முடியும் என்று காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர்.

ஜெகன்மோகன் ரெட்டி கூறும்போது, இந்தியாவில் அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்துள்ள சோனியாகாந்தி, என்னை தோற்கடிக்க பல்வேறு வியூகம் அமைத்துள்ளார். அவற்றை நான் மக்களின் பேராதரவுடன் முறியடிப்பேன். ஆந்திர மக்கள் என்னைத்தான் ஆதரிக்கிறார்கள் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts