சென்னை: "ஸ்பெக்ட்ரம் ஊழலில், பயனடைந்த கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:2"ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முக்கிய பயனாளியான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் மூலம், கலைஞர் டி.வி.,க்கு 214 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கலைஞர் டி.வி., யின் பங்குதாரர்களான முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழியிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. இந்நிலையில், சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய பயனாளிகளுக்கும், முதல்வர் கருணாநிதியின் குடும்பத்திற்கும் இடையே உள்ள சட்டவிரோத பணபரிமாற்றம் தெளிவாக நிரூபணமாகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம்பெற்றதுடன் இப்பிரச்னை நின்றுவிடாது. லஞ்ச பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.,யின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். இந்த ஊழலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
இந்த லஞ்சப் பணம் சென்றடைந்த இடம் முழுமையாக கண்டறியப்பட வேண்டும். அப்போது தான் ஊழலின் தாயாக விளங்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலின் விசாரணை நியாயமான முடிவை அடையும். விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிவதில் வல்லவரான ஒருவர் தான் இந்த மாபெரும் ஊழலை நிகழ்த்தி உள்ளார் என்பதை சி.பி.ஐ., கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment