background img

புதிய வரவு

டெல்லியை சேர்ந்த 4 மாணவருக்கு நாசா விருது!

புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த 4 மாணவர்களுக்கு நாசா நிறுவனத்தின் விருது கிடைத்துள்ளது. விண்வெளியில் வசிப்பிடம் அமைப்பது தொடர்பான வடிவமைப்பு போட்டியை பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா நடத்தியது. இதில் கலந்து கொண்ட டெல்லி பப்ளிக் பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர்கள் சித்தார்த் திரிபாதி, அக்ஷத் தத், நிசார்க் பெஹ்ரா மற்றும் 8ம் வகுப்பு மாணவர் மிருணாள் சவுத்ரி ஆகிய 4 மாணவர்கள் விருது பெற்றுள்ளனர்.

விண்வெளியில் 20 ஆயிரம் பேர் வசிக்க கூடிய அளவுக்கு அடிப்படை வசதிகளுடன் காலனியை இம்மாணவர்கள் கற்பனையாக வடிவமைத்திருந்தனர். வீட்டுக்கு உள்ளும், வெளியேயும் வசிப்பிட பகுதிகள் குறித்து ஓவியங்கள் மற்றும் வரைபடங்கள் வரைந்த 8ம் வகுப்பு மாணவர் மிருணாள் சிறப்பு பரிசை பெற்றுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts