background img

புதிய வரவு

மூத்த வீரர்களுக்கு ஓய்வு? பிசிசிஐ முடிவு!

ஐபிஎல் போட்டிகள் முடிந்த அடுத்த வாரத்திலேயே, அதாவது ஜூன் 4ம் தேதியே இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் ஆட இருக்கிறது. எனவே தொடர்ந்து விளையாடி வரும் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்திய அணி ஒரு 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் ஆட்டம், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் போட்டியில் மட்டும் சச்சின், தோனி, ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், கம்பீர் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்று தெரிகிறது. வீரேந்திர சேவாக் இந்த தொடர் முழுவதும் விளையாட மாட்டார்.


தங்களுக்கு ஓய்வு தேவை என்பது குறித்து இந்த மூத்த வீரர்கள் ஏற்கெனவே கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் போதிய ஓய்வு எடுத்தால்தான் இந்த ஆண்டில் அடுத்து நடைபெறவுள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாட முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து வீரர்களுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts