சென்னை ஐகோர்ட்டுக்கு கோடைகால விடுமுறை தொடங்கியது. விடுமுறைகால கோர்ட்டுகளில் நீதிபதிகள் யார்? யார்? விசாரணை நடத்துவார்கள் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் எஸ்.விமலா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
சென்னை ஐகோர்ட்டுக்கு மே 1ந் தேதியில் இருந்து ஜுன் 5ந் தேதி வரை கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை கால கோர்ட்டுகளை நடத்துவதற்காக, விடுமுறை காலம் 3 பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது.
மே 1 15 தேதி முதல் பகுதி என்றும், மே 16 29 இரண்டாம் பகுதியாகவும், மே 30 முதல் ஜுன் 5 ந் தேதிவரை மூன்றாம் பகுதியாகவும் கோடைகால விடுமுறை பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் பகுதி விடுமுறை காலத்தில் மே 4, 5, 11, 12 ந் தேதிகளில் ஐகோர்ட்டு இயங்கும். அப்போது வழக்குகளை நீதிபதிகள் வி.தனபாலன், சி.எஸ்.கர்ணன், ஏ.ஆறுமுகசாமி விசாரிப்பார்கள். அனைத்து டிவிஷன் பெஞ்ச் விவகாரங்களையும் நீதிபதிகள் வி.தனபாலன், ஏ.ஆறுமுகசாமி ஆகியோர் விசாரிப்பார்கள்.
டிவிஷன் பெஞ்ச் விசாரணை முடிந்ததும், ரிட் மனுக்கள், வரி, மோட்டார் வாகன வழக்குகள், கல்வி, சுரங்கம் மற்றும் கனிமம், தொழிற்சாலைகள், மின்சாரம், நில ஆர்ஜிதம், உள்ளாட்சி விவகாரங்கள் ஆகிய வழக்குகளை நீதிபதி வி.தனபாலன் விசாரிப்பார்.
டிவிஷன் பெஞ்ச் பணிகள் முடிந்த பிறகு, ரிட் மனுக்கள், தொழிலாளர் நலன், அரசுப் பணி, சுங்கம் மற்றும் மத்திய கலால், வனம், நில சீர்திருத்தம், கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட வழக்குகளை நீதிபதி ஏ.ஆறுமுகசாமி விசாரிப்பார். அனைத்து கிரிமினல் வழக்குகளையும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரிப்பார்.
இரண்டாம் பகுதி விடுமுறை காலத்தில் மே 18, 19, 25, 26 ந் தேதிகளில் ஐகோர்ட்டு இயங்கும். இந்த நாட்களில் நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், சி.எஸ்.கர்ணன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். அனைத்து டிவிஷன் பெஞ்ச் வழக்குகளை நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் விசாரிப்பார்கள்.
டிவிஷன் பெஞ்ச் விசாரணை முடிந்ததும், ரிட் மனுக்கள், வரி, மோட்டார் வாகன வழக்குகள், கல்வி, சுரங்கம் மற்றும் கனிமம், தொழிற்சாலைகள், மின்சாரம், நில ஆர்ஜிதம், உள்ளாட்சி விவகாரங்கள் ஆகிய வழக்குகளை நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரிப்பார்.
டிவிஷன் பெஞ்ச் பணிகள் முடிந்த பிறகு, ரிட் மனுக்கள், தொழிலாளர் நலன், அரசுப் பணி, சுங்கம் மற்றும் மத்திய கலால், வனம், நில சீர்திருத்தம், கூட்டுறவு சங்கம், சினிமா சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிபதி கே.பி.கே.வாசுகி விசாரிப்பார். அனைத்து கிரிமினல் வழக்குகளையும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரிப்பார்.
மூன்றாம் பகுதி விடுமுறை காலத்தில் ஜுன் 1, 2 ந் தேதிகளில் ஐகோர்ட்டு இயங்கும். நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், சி.எஸ்.கர்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். அனைத்து டிவிஷன் பெஞ்ச் வழக்குகளையும் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், ஜி.எம்.அக்பர் அலி விசாரிப்பார்கள்.
டிவிஷன் பெஞ்ச் பணி முடிந்ததும் ரிட் மனுக்கள், வரி, மோட்டார் வாகன வழக்குகள், கல்வி, சுரங்கம் மற்றும் கனிமம், தொழிற்சாலைகள், மின்சாரம், நில ஆர்ஜிதம், உள்ளாட்சி விவகாரங்கள் ஆகிய வழக்குகளை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரிப்பார்.
டிவிஷன் பெஞ்ச் பணிகள் முடிந்த பிறகு, ரிட் மனுக்கள், தொழிலாளர் நலன், அரசுப் பணி, சுங்கம் மற்றும் மத்திய கலால், வனம், நில சீர்திருத்தம், கூட்டுறவு சங்கம், சினிமா சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி விசாரிப்பார். அனைத்து கிரிமினல் வழக்குகளையும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரிப்பார்.
விடுமுறை கால கோர்ட்டுகளில் அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அவசரத்துக்கான காரணத்தை தனியாக காட்ட வேண்டும். விடுமுறைகால கோர்ட்டு காலை 10.30 மணியில் இருந்து மாலை 4.45 மணிவரை இயங்கும்.
மே 2, 3, 9, 10, 16, 17, 23, 24, 30, 31 ஆகிய தேதிகளில் மனு தாக்கல் செய்யலாம். ஐகோர்ட்டு பதிவகம் காலை 10 மணி முதல் மாலை 4.45 மணிவரை இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment