background img

புதிய வரவு

ஜெயலலிதா இன்று கோடநாடு வருகை

கோத்தகிரி : இரண்டு வாரங்கள் ஓய்வெடுப்பதற்காக, அ.தி.மு.க., பொது செயலர் ஜெயலலிதா, இன்று கோடநாடு வருகிறார். சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளிவந்த நாள் முதல் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு செய்வது வரை படு "பிஸி'யாக இருந்த ஜெயலலிதா, அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, 19 நாட்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினார்.
தேர்தல் அறிவிப்பு வெளிவர இன்னும் 24 நாட்கள் உள்ள நிலையில், ஜெயலலிதா ஓய்வு எடுப்பதற்காக இன்று, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டுக்கு வருகிறார். சென்னையில் இருந்து இன்று காலை 11.00 மணிக்கு, விமானத்தில் கோவை வரும் ஜெயலலிதா, அங்கிருந்து, பகல் 1.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு வருகிறார். எஸ்டேட்டில் அமைக்கப்பட்டுள்ள, "ஹெலிபேடில்' இறங்கி, 2.15 மணிக்கு பங்களாவுக்குள் செல்கிறார்.
எஸ்டேட் நுழைவாயிலில் அவருக்கு அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில், வரவேற்பு அளிக்கப்படுகிறது. கோடநாடு எஸ்டேட் பங்களாவில் இரண்டு வாரங்கள் தங்கி ஓய்வெடுக்க உள்ள ஜெயலலிதா, அங்கிருந்தபடியே, கட்சிப் பணிகளையும் கவனிக்கிறார். ஓட்டு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெறும் நிலையில், மே 10ம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts