இந்திய திரைப்பட துறையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தனது பங்கை வழங்கியதற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. பாலச்சந்தருக்கு தங்க தாமரையும், ரூ. 10 லட்சம் ரொக்கமும் வழங்கப்படும். எம்.ஜி.ஆர். நடித்த தெய்வத்தாய் படம் மூலம் வசனகர்த்தாவாக பாலச்சந்தர் அறிமுகமானார்.
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். ரஜினி, கமல், பிரகாஷ்ராஜ், விவேக் போன்றோரை திரையுலகுக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார்.
“இரு கோடுகள்”, “பாமா விஜயம்”, “சர்வர் சுந்தரம்”, “அபூர்வராகங்கள்”, “அவள் ஒரு தொடர்கதை”, “தண்ணீர் தண்ணீர்”, “அச்ச மில்லை அச்சமில்லை”, “சிந்து பைரவி”, “அவர்கள்”, “தில்லுமுல்லு”, “அழகன்”, “ஜாதி மல்லி”, இந்தியில் “ஏக் துஜே கேலியே”, தெலுங்கில் “மரோசரித்திரா” போன்றவை பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த முக்கிய படங்கள்.
விருது பெற்றது குறித்து பாலச்சந்தர் கூறும்போது, சிவாஜிக்கு பிறகு எனக்கு இவ்விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்விருதை தமிழ் ரசிகர்களுக்கு அர்ப் பணிக்கிறேன் என்றார். பாலச்சந்தருக்கு நடிகர்கள், இயக்குனர் கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் கமலஹாசன் கூறியதாவது:-
பாலச்சந்தருக்கு இவ்விருது தாமதமாக கிடைத்துள்ளது. விருது கமிட்டியில் நான் இருந்திருந்தால் “ஏக் துஜே கேலியே” படத்துக்கு முன்பே கொடுத்து இருப்பேன். விருது கொடுத்த இந்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் கூறும்போது, இயக்குனர் பாலச்சந்தருக்கு “தாதா சாகேப் பால்கே” விருது கிடைத்ததன் மூலம் அவ்விருதுக்கு அழகும் அர்த்தமும் கிடைத்துள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இந்த கவுரவத்தால் திரையுலகமே பெருமை பெற்றுள்ளது என்றார்.
நடிகர் விவேக் கூறும்போது, எங்களுக்கெல்லாம் பாலச்சந்தர் தான் பாஸ். அவர் படங்கள் மூலம் தான் நிறைய நடிகர்- நடிகைகளுக்கு தேசிய விருதுகள் கிடைத்தன. “சிந்து பைரவி”யில் சுகாசினி சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
அதே படத்தில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது இளையராஜாவுக்கு கிடைத்தது என்றார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூறும்போது, பாலச்சந்தருக்கு கிடைத்த பெரிய கவுரவம் இவ்விருது என்றார்.

0 comments :
Post a Comment