முதல் அமைச்சர், அமைச்சர்கள் யாரும் இல்லை என்று கூறும் குமாரசாமி முதலில் கர்நாடக மாநிலத்தில்தான் இருக்கிறாரா? என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று எடியூரப்பா கூறினார்.
மைசூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக முதல் அமைச்சர் எடியூரப்பா மைசூர் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா,
கர்நாடக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்திக்கொண்டு இருக்கிறோம். ஏப்ரல் மாதத்துக்குள் இந்த ஆய்வு பணிகளை முடித்து வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
அப்போது எடியூரப்பாவிடம், முன்னாள் முதல் அமைச்சர் குமாரசாமி கர்நாடக மாநிலத்தில் முதல் அமைச்சர், அமைச்சர்கள் யாரும் இல்லை என்று கூறி இருக்கிறாரே? என்று கேட்டனர்.
அதற்கு எடியூரப்பா பதில் அளிக்கையில், முதலில் குமாரசாமி இந்த மாநிலத்தில்தான் இருக்கிறாரா? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எங்களை பற்றி கேலி செய்யக்கூடாது. நான் மற்றும் எனது ஆட்சியில் உள்ள மந்திரிகள் மாநிலத்தில் என்ன வேலைகள் செய்து உள்ளோம் என்பது மாநில மக்களுக்கு தெரியும். ஆனால் அதுபற்றி குமாரசாமிக்கு தெரியாது என்றார்.

0 comments :
Post a Comment