background img

புதிய வரவு

துனிசியா நாட்டில் சிறைகளில் இருந்து கைதிகள் 800 பேர் தப்பி ஓட்டம்

ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அதிபர் பென்அலிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதை தொடர்ந்து அவர் பதவி விலகினார். போராட்டத்தின் போது சிறைகளில் இருந்த சுமார் 11 ஆயிரம் கைதிகள் தப்பி ஓடி விட்டனர்.

பின்னர் அவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். கடும் எச்சரிக்கைக்கு பின்னர் மேலும் 2 ஆயிரம் பேர் தானாக சரண் அடைந்தனர்.அதே போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.

துனிசியாவின் மத்திய மேற்கு பகுதியில் கஸ்கரின் என்ற இடத்தில் மத்திய சிறை உள்ளது. இங்குள்ள 2 கைதிகள் அறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனவே தீயை அணைக்கும் பணியில் சிறை கைதிகள் ஈடுபட்டனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு 522 கைதிகள் அங்கிருந்து தப்பி விட்டனர்.

கஸ்கானில் இருந்து 150 கி.மீட்டர் தூரத்தில் காப்சா என்ற இடத்தில் மற்றொரு சிறை உள்ளது. அந்த சிறையை உடைத்து 300 கைதிகள் தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்ததும் நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அதை தொடர்ந்து ஜெயிலில் இருந்து தப்பி ஓடிய 35 பேர் ஒரு மணி நேரத்தில் பிடிபட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts