background img

புதிய வரவு

ஆராய்ச்சியை மேம்படுத்த சென்னையில் மெகா அறிவியல் நகரம்

சென்னை: ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் சென்னையில் பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி. உள்ளிட்ட 69 கல்வி நிறுவனங்களை அடக்கிய மெகா அறிவியல் நகரம் உருவாக்கப்படவிருக்கிறது. இதற்காக முன்னாள் துணைவேந்தர் வி.சி.குழந்தைசாமி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி தமிழ்நாட்டை அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்த விளங்கும் மாநிலமாக்கத் திட்டமிட்டு சென்னையில் மெகா அறிவியல் நகரம் அமைக்க முடிவு செய்தார். இது குறித்து ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக தற்போது அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மெகா அறிவியல் நகரம் அமைக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான பேராசிரியர் வி.சி.குழந்தைசாமி தலைமையில் குழு ஒன்று கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.திருவாசகம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர் ஜவகர், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.தங்கராஜ், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் க.கணேசன், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி மன்ற துணைத்தலைவர் எம்.எஸ்.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று சென்னை மெகா அறிவியல் நகரம் உருவாக்குவது பற்றிய இரண்டாவது கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி., தரமணியில் உள்ள மத்திய மற்றும் மாநில அரசின் கல்வி நிறுவனங்கள், சென்னை பல்கலைக்கழக கிண்டி வளாகம், தரமணி வளாகம், கோட்டூர்புரத்தில் உள்ள அறிவியல் நகரம், பிர்லா கோள் அரங்கம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையம் உள்ளிட்ட 69 கல்வி நிறுவனங்கள் இதில் அடங்கும்.

அத்தனை நிறுவனங்களில் உள்ள வசதி வாய்ப்புகளை ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பயன்படுத்தி ஆராய்ச்சி பணியை மேம்படுத்த இந்த மெகா அறிவியல் நகரம் பயன்படும். இத்தனை நிறுவனங்களையும் இணைப்பதுதான் சென்னை மெகா அறிவியல் நகரம் ஆகும்.

மெகா அறிவியல் நகரத்திற்காக 25 ஏக்கர் இடம் ஒதுக்கப்படுகிறது. அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதில் பெரிய கூட்டரங்கு பிரமாண்டமாக கட்டப்பட உள்ளது. அது தவிர சில மையங்களும் கட்டப்படவுள்ளன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts