background img

புதிய வரவு

தேர்தலில் எதிராக செயல்பட்ட திமுகவினர் கட்சியில் இருந்து நீக்கம்: தி.மு.க. தலைமைக் கழகம்

தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க.வினரை கட்சியில் இருந்து நீக்கி தலைமைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக மாவட்ட துணை செயலாளர் ஆர்.சாந்தாமணி மற்றும் அவரது கணவர் எம்.ராமலிங்கம் ஆகியோர் கழகத் தோழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையிலும், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், தி.மு.க. உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.


அதேபோல, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு எதிராக ஆவுடையார்கோயில் ஒன்றிய செயலாளர் உதயம் சண்முகம் எம்.எல்.ஏ., சிறுமருதூர் கிளை செயலாளர் மு.நரேந்திரஜோதி, ஆவுடையார்கோயில் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி, சித்தக்கூர் கிளைச் செயலாளர் சிவமணி ஆகியோர் கழகத் தோழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையிலும், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், தி.மு.க. உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts