background img

புதிய வரவு

வேலாயுதம் ரிலீஸ் - பிறந்த நாள்: இலவச வேட்டி சேலை வழங்கும் விஜய்!

தனது வேலாயுதம் பட வெளியீட்டையும் பிறந்த நாள் விழாவையும் ஏழைகள் பயனடையும் வகையில் கொண்டாட முடிவு செய்துள்ளார் நடிகர் விஜய்.

எம் ராஜா இயக்கத்தில் விஜய் தற்போது வேலாயுதம், படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் ஜூன் 22-ம் தேதி, விஜய் பிறந்த நாளில் வெளியாகிறது. இதில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடித்துள்ளனர்.

வேலாயுதம் படத்தை விஜய் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். விஜய் பிறந்த நாளில் படம் வெளியாவதால், விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் இதனை பெரும் விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

ஆனால் வீண் செலவுகள் செய்யாமல், மக்களுக்குப் பயனுள்ள வகையில் இந்த விழா அமைய வேண்டும் என விஜய் கூறிவிட்டதால், அன்று ஏழைகளுக்கு வேட்டி-சேலைகள் மற்றும் இலவச உணவு வழங்க ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். விஜய்யே இந்த உதவிகளை நேரில் வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.

இவை தவிர, கல்வி மற்றும் மருத்துவ உதவிகளையும் அந்த நாளில் அறிவிக்க உள்ளார்களாம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts