கோ படம் வந்த பிறகு படத்தின் நாயகி கார்த்திகாவைவிட பாதியில் இறந்து போகும் பியாதான் பலரையும் கவர்ந்துவிட்டார்.
நிறைய தடைகளைக் கடந்து சினிமா வெற்றியை ருசித்தவர்களில் ஒருவர் பியா. ஆரம்பத்தில் ரிசப்ஷனிஸ், இந்திய சீரியல்களுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட், விளண்பர மாடல் என போராடியவருக்கு, பொய் சொல்லப் போறோம் படத்தில் வாய்ப்புக் கொடுத்தவர்கள் இயக்குநர் விஜய்யும் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ப்ரியதர்ஷனும். பின்னர் கோவா மூலம் அவரது கேரியர் சற்று நிமிர்ந்தது.
சொந்த மாநிலம் உபி என்றாலும், தட்டுத் தடுமாறி தமிழ் பேச முயற்சிக்கும் அவரிடம் கோ பட அனுபவம் பற்றி அவரிடம் பேசினோம். அவர் கூறுகையில், "இந்த வேடத்தில் முதலி நான் இல்லை. பின்னர்தான் ஒப்புக் கொண்டேன். பாதியில் என் கேரக்டர் முடிந்துவிட்டாலும் படம் விட்டு வந்த பிறகும் பேச வைத்துள்ள இயக்குநர் கே வி ஆனந்துக்கு நன்றி.
கோ என் கேரியரில் பெரிய ஹிட் படம். இப்போது முன்பை விட இன்னும் அழகாகவும் ப்ரெண்ட்லியாகவும் தெரிகிறது சென்னையும் தமிழ்நாடும்.
குறைவான எண்ணிக்கை என்றும் இந்த மாதிரி நிறைவான கேரக்டர்கள் செய்ய ஆசை. மணிரத்னம் போன்ற இயக்குநர்கள் படத்தில் நடிக்க மிக விருப்பம்.
தனிப்பட்ட வாழ்க்கை என்று பார்த்தாலும், இந்தப் படத்தில் வருவது போல கலகல கேரக்டர்தான் நான். நிறைய ப்ரெண்ட்ஸ். பெரும்பாலும் ஆண் நண்பர்கள். ஆனால் அதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. நிறைய பாய் பிரண்ட்ஸ் இருப்பது தவறு என்றால், எல்லோரும் தனியாகத்தான் அலைய வேண்டும்.
வெங்கட்பிரபுவுடன் காதல்?
காதல், கல்யாணம் என்றெல்லாம் இப்போதைக்கு எந்த பிளானும் இல்லை. வெங்கட் பிரபுவுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறுவதில் உண்மையில்லை. வழக்கமான பதிலைத்தான் நானும் சொல்லப் போகிறேன். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.
இப்போதைக்கு திகட்டத் திகட்ட வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். மற்றதெல்லாம் அப்புறம்...," என்றார்.
கல்யாணத்துக்கப்புறம் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது என்பதில் ரொம்பத்தான் தெளிவா இருக்கார்!

0 comments :
Post a Comment