background img

புதிய வரவு

நடிகர் கார்த்தி நிச்சயதார்த்தம்! கிராமமே விழாக்கோலம் பூண்டது!!

நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே குமாரசாமி கவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில் கோலாகலமாக நடந்தது. இந்த மங்களகரமான நிகழ்ச்சி‌யையொட்டி அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பருத்தி வீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகர் கார்த்திக்கும், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள குமாரசாமி கவுண்டம்பாளையம் விவசாய குடும்பத்தை சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சி தம்பதியின் மகள் ரஞ்சனிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணப்பெண் ரஞ்சனி எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்து முடித்துள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மணமகளின் சொந்த ஊரான குமாரசாமி கவுண்டம்பாளையத்தில் நேற்று (29-04-11) நடந்தது. இதில் இரு தரப்பிலும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

முன்னதாக நடிகர் கார்த்தி வருவதையறிந்த கிராம மக்களும், ரசிகர்களும் அந்த‌ கிராமத்தில் குவிந்திருந்தனர். கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. நடிகர் கார்த்தி மணக்கப்போகும் பெண், தங்கள் கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் மகிழ்ச்சி அடைவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனர். கார்த்தி - ரஞ்சனி திருமணம் வரும் ஜூலை 8ம்தேதி கோவை கொடீசியா வளாகத்தில் நடைபெறுகிறது. திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என மணமக்கள் வீட்டார் தெரிவித்தனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts