background img

புதிய வரவு

ஹசாரேவை விமர்சிப்பதா? ராகுலுக்கு மோடி கண்டனம்

மார்பி :""ஊழலை ஒழிக்க நான் விரும்புகிறேன்; அதே நேரத்தில் ஹீரோ ஆக விரும்பவில்லை,'' என, ராகுல் தெரிவித்துள்ளதற்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர், காங்., பொதுச் செயலர் ராகுலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார். அதில், "நாட்டில் அதிகரித்துவிட்ட ஊழலை ஒழிக்க ராகுல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த ராகுல், "நான் ஊழலை ஒழிக்கவே விரும்புகிறேன்; ஹீரோ ஆக விரும்பவில்லை' என, தெரிவித்தார்.

இந்நிலையில், குஜராத்தில் மார்பி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் மோடி, ""மக்கள் பணி செய்வதே நம் கடமை. ஹசாரே போன்ற காந்தியவாதிகள் தங்களை ஹீரோவாக கருதி ஒருபோதும் பணியாற்றியதில்லை,'' என, ராகுல் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக கண்டனம் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது:நாட்டில் அதிகரித்துவிட்ட ஊழலை ஒழிப்பதற்காக, அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். குஜராத் மாநிலத்தை அவர் பாராட்டிவிட்டதற்காக, அவரை சிலர் குறிவைத்து தாக்கி பேசி வருகின்றனர். குஜராத் வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு விதங்களில் இடையூறு ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசின் ஒத்துழைப்பு இன்றி, பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு நிறைவேற்றி வருகிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மத்திய அரசின் திட்டங்கள் எதுவுமே நமக்கு கிடைப்பதில்லை.இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts