மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கடைசி பந்தில் "திரில்' வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய யுவராஜ் சிங்கின் புனே வாரியர்ஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ்-புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற புனே அணி கேப்டன் யுவராஜ் சிங், பேட்டிங் தேர்வு செய்தார்.
ஹர்பஜன் இல்லை:
இப்போட்டிக்கான இரு அணியிலும் தலா இரண்டு மாற்றம் செய்யப்பட்டது. மும்பை அணியில் ஹர்பஜன் சிங், டேவிட் ஜேக்கப்ஸ் நீக்கப்பட்டு, ஜேம்ஸ் பிராங்க்ளின், அபு நேசிம் அகமது வாய்ப்பு பெற்றனர். புனே அணியில் ஸ்டீவன் ஸ்மித், பார்னல் நீக்கப்பட்டு டிம் பெய்னே, முரளி கார்த்திக் தேர்வு செய்யப்பட்டனர்.
விக்கெட் "மடமட':
முதலில் பேட்டிங் செய்த புனே அணிக்கு, "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். நேசிம் அகமது வீசிய ஆட்டத்தின் 4வது ஓவரில் ஜெசி ரைடர் (12), மிதுன் மன்ஹாஸ் (0) அவுட்டானார்கள். முனாப் படேல் வீசிய 5வது ஓவரில் டிம் பெய்னே (2), யுவராஜ் சிங் (0) பெவிலியன் திரும்பினர். இதனால் புனே அணி 17 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
உத்தப்பா ஆறுதல்:
பின் இணைந்த ராபின் உத்தப்பா, மோனிஷ் மிஸ்ரா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. மும்பை பந்துவீச்சை எளிதாக சமாளித்த இந்த ஜோடி, 5வது விக்கெட்டுக்கு 35 ரன்கள் சேர்த்தபோது மோனிஷ் மிஸ்ரா (12) அவுட்டானார். அடுத்து வந்த முரளி கார்த்திக் (11) நிலைக்கவில்லை. மறுமுனையில் பொறுப்பாக ஆடிய உத்தப்பா, 37 பந்தில் ஒரு சிக்சர், 6 பவுண்டரி உட்பட 45 ரன்கள் எடுத்து அரைசத வாய்ப்பை இழந்தார். அடுத்து களமிறங்கிய பார்னல் (9), ஸ்ரீகாந்த் வாக் (2), ராகுல் சர்மா (13) சொற்ப ரன்களில் வெளியேற, புனே வாரியர்ஸ் அணி 17.2 ஓவரில் 118 ரன்களுக்கு சுருண்டது. மும்பை சார்பில் முனாப் படேல் 3, மொர்டசா, மலிங்கா, நேசிம் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சச்சின் நம்பிக்கை:
சுலப இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, ஜேம்ஸ் பிராங்க்ளின் (6) ஏமாற்றம் அளித்தார். பின் இணைந்த சச்சின், அம்பாதி ராயுடு ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நிதானமாக ஆடிய இந்த ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த போது, ராகுல் சர்மா சுழலில் சச்சின் (35) சிக்கினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த அம்பாதி ராயுடு (37), தாமஸ் பந்தில் வெளியேறினார்.
திரில் வெற்றி:
அடுத்து வந்த சைமண்ட்ஸ், ரோகித் சர்மா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. முரளி கார்த்திக் வீசிய கடைசி ஓவரின் முதல் மூன்று பந்தில் தலா ஒரு ரன் எடுக்கப்பட்டது. நான்காவது பந்தை சைமண்ட்ஸ் வீணடிக்க, இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் என நெருக்கடி ஏற்பட்டது. ஐந்தாவது பந்தில் சைமண்ட்ஸ் ஒரு ரன் எடுக்க, கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. இதில் ஒரு "சூப்பர் சிக்சர்' அடித்த ரோகித் சர்மா, வெற்றியை உறுதி செய்தார். மும்பை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் (20), சைமண்ட்ஸ் (16) அவுட்டாகாமல் இருந்தனர். புனே அணி சார்பில் தாமஸ், வாக், ராகுல் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக மும்பை அணியின் முனாப் படேல் தேர்வு செய்யப்பட்டார்.

0 comments :
Post a Comment