background img

புதிய வரவு

சென்னை கிங்ஸ் பரிதாப தோல்வி *கொச்சி அணி அபாரம்

கொச்சி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியடைந்தது. மெக்கலம் அதிரடியில் அசத்த, கொச்சி அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதில் நேற்று கொச்சியில் நடந்த லீக் போட்டியில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஜெயவர்தனாவை கேப்டனாக கொண்ட கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியுடன் மோதியது. சென்னை அணியில் ரந்திவ் நீக்கப்பட்டு, போலிஞ்சர் சேர்க்கப்பட்டார். கொச்சி அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
"டாஸ்' வென்ற கொச்சி கேப்டன் ஜெயவர்தனா, பீல்டிங் தேர்வு செய்தார்.
ஹசி ஏமாற்றம்:
சென்னை கிங்சிற்கு மைக்கேல் ஹசி, முரளி விஜய் இணைந்து துவக்கம் கொடுத்தனர். கடந்த போட்டியில் அரைசதம் விளாசிய ஹசி, இம்முறை ஆர்.பி.சிங், ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்து அதிரடியை துவக்கினார். ஆனால் 8 ரன்னுக்கு அவுட்டாகி ஏமாற்றம் தந்தார்.
விஜய் அதிரடி:
முரளி விஜய் தன்பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆர்.பி.சிங், பெரேரா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசி அசத்தினார். 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த நிலையில் முரளி விஜய், பெரேராவிடம் வீழ்ந்தார். பின் ரெய்னா பத்ரிநாத் இணைந்தனர்.
மழை குறுக்கீடு:
சென்னை அணி 9 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. சுமார் ஒன்றரை மணி நேர தாமதத்துக்குப் பின், 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு, போட்டி மீண்டும் துவங்கியது.
ரெய்னா அரைசதம்:
ரெய்னா அவ்வப்போது பவுண்டரிகள் அடிக்க, மறுமுனையில் பத்ரிநாத் (19) வீழ்ந்தார். கோமெஜ் பந்தில் இப்போட்டியின் முதல் சிக்சரை அடித்த ரெய்னா (50), அரைசதம் கடந்து அவுட்டானார். ஜடேஜாவின் கடைசி ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடிக்கப்பட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது.
தோனி (14), மார்கல் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
அபார துவக்கம்:
"டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி, 17 ஓவரில் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு பிரண்டன் மெக்கலம், ஜெயவர்தனா ஜோடி துவக்கம் கொடுத்தது. மார்கல் வீசிய முதல் ஓவரில் சிக்சர் அடித்து தனது அதிரடியை துவக்கினார் மெக்கலம். அஷ்வின் ஓவரில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி விளாசிய ஜெயவர்தனா (16), அவரிடமே சிக்கினார்.
மெக்கலம் அசத்தல்:
ஜகாதியில் பந்தில் "சூப்பர்' சிக்சர் அடித்த மெக்கலம், சவுத்தியின் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்தார். 33 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த மெக்கலம், அரைசத வாய்ப்பை இழந்தார்.
பார்த்திவ் கலக்கல்:
மெக்கலம் அவுட்டானபின் பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டார் பார்த்திவ் படேல். அவ்வப்போது பவுண்டரிகள் அடித்த பார்த்திவ் படேல், ஜகாதியின் பந்தில் "சிக்சர்' விளாசினார். இவர் 34 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
பின் வந்த ஹாட்ஜ், ரவிந்திர ஜடேஜா இணைந்து கொச்சி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். கொச்சி அணி 15 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து, "டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹாட்ஜ் (19), ரவிந்திர ஜடேஜா (16) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை சார்பில் அஷ்வின் 2 விக்கெட் வீழ்த்தினார்

ஸ்கோர்போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஹசி(கே)பார்த்திவ்(ப)ஆர்.பி.சிங் 8(10)
விஜய்-எல்.பி.டபிள்யு.,(ப)பெரேரா 28(18)
ரெய்னா--ரன் அவுட் (பெரேரா) 50(40)
பத்ரிநாத்-எல்.பி.டபிள்யு.,(ப)கோமெஜ் 19(17)
தோனி-அவுட் இல்லை- 14(13)
மார்கல்-அவுட் இல்லை- 9(4)
உதிரிகள் 3
மொத்தம் (17 ஓவரில், 4 விக்.,) 131
விக்கெட் வீழ்ச்சி: 1-11(மைக்கேல் ஹசி), 2-48(முரளி விஜய்), 3-96(பத்ரிநாத்), 4-109(ரெய்னா).
பந்து வீச்சு: ஆர்.பி.சிங் 4-0-24-1, வினய் குமார் 3-0-16-0, பெரேரா 4-0-32-1, ரமேஷ் பவார் 3-0-24-0, கோமெஜ் 2-0-20-1, ரவிந்திர ஜடேஜா 1-0-14-0.
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா
மெக்கலம்(கே)மார்கல்(ப)அஷ்வின் 47(33)
ஜெயவர்தனா(கே)அனிருதா(ப)அஷ்வின் 16(11)
பார்த்திவ்(கே)அனிருதா(ப)போலிஞ்சர் 34(26)
ஹாட்ஜ்--அவுட் இல்லை- 19(14)
ஜடேஜா-அவுட் இல்லை- 16(6)
உதிரிகள் 3
மொத்தம் (15 ஓவரில் 3 விக்.,) 135
விக்கெட் வீழ்ச்சி: 1-39(ஜெயவர்தனா), 2-90(மெக்கலம்), 3-110(பார்த்திவ் படேல்).
பந்துவீச்சு: மார்கல் 2-0-17-0, போலிஞ்சர் 3-0-18-1, அஷ்வின் 4-0-31-2, சவுத்தி 3-0-38-0, ஜகாதி 3-0-30-0.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts