background img

புதிய வரவு

மனித குரங்கு போன்று படம்: அமெரிக்க அதிபர் ஒபாமா பற்றி இனவெறி இ-மெயில்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்கர் அல்ல. வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற சர்ச்சை சமீபத்தில் எழுந்தது. அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தான் அமெரிக்காவில் பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழை ஒபாமா வெளியிட்டார்.

தற்போது, அவரை இழிவுபடுத்தும் வகையில் இனவெறி இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது அவரது தாய், தந்தையை பெரிய மனித குரங்கு போன்றும், அவர்களுடன் குட்டி மனித குரங்காக ஒபாமா இருப்பது போன்றும் படம் வரைந்து இ-மெயில் வெளியிடப்பட்டுள்ளது.

இதை கலிபோர்னியாவில் உள்ள “டீ பார்ட்டி” அமைப்பைச்சேர்ந்த மரில்யன் தேவன் போர்ட் என்ற பெண் அனுப்பியுள்ளார். இவர் ஆரிஞ்ச் மாகாண குடியரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார். படத்துடன் அனுப்பியுள்ள இ-மெயிலில், அவர் யார்? என்று தெரியவில்லை

ஏனெனில் அவரிடம் பிறப்பு சான்றிதழ் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த இ-மெயிலுக்கு அமெரிக்காவில் கடும் கண்ட னம் எழுந்துள்ளது. ஒபாமா குறித்து அவர் அனுப்பிய இந்த இ-மெயில் இனவெறியை தூண்டுகிறது.

அவரது இந்த மட்டமான ரசனை வெறுக்க தக்க வகையில் உள்ளது என அவரது கட்சியின் ஆரிஞ்ச் மாகாண தலைவர் ஸ்காட்பாக் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது கட்சியில் இருந்து பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியேற வேண்டும் என கூறி உள்ளார்.

இது போன்று அவரது கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் பதவி விலக தேவன் போர்ட் மறுத்துள்ளார். நான் இனவெறியை தூண்டுவதற்காக இது போன்று இ-மெயில் அனுப்பவில்லை. ஒபாமாவை கேலி (ஜோக்) செய்யவே இது போன்று செய்தேன்.

எனது நடவடிக்கையில் யாருக்கேனும் மனவருத்தம் ஏற்பட்டால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts