background img

புதிய வரவு

இளைஞர் காங்கிரசில் சேர்ந்தால் கோவா மாநிலத்தில் அரசு வேலை

பனாஜி : "அரசு வேலை தேடும் இளைஞர்கள், மாநிலத்தில் இளைஞர் காங்கிரசில் சேர வேண்டும்' என்று கோவா முதல்வர் திகம்பர் காமத் அழைப்பு விடுத்துள்ளார். கோவாவில், இம்மாதத்துடன், இளைஞர் காங்கிரசில் தொண்டர்கள் சேர்ப்பு பணி முடிவடைகிறது. இதன் பின்னர் தேர்தல் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து மாநில முதல்வர் திகம்பர் காமத் பனாஜியில் கூறுகையில், "மாநிலத்தின் முதல்வராக, இதுவரை, நான், குறைந்தது 1,000 அரசு வேலை வழங்கி உள்ளேன், என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் 35 வயதுக்கு குறைந்தவர்கள் யார் வேண்டுமானாலும், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகலாம். வேலை தேடுபவர்கள், வேலை கிடைத்தவர்கள் என யார் வேண்டுமானாலும் உறுப்பினர்கள் ஆகலாம். நீங்கள் உறுப்பினரானால், வேலை வழங்குவது பற்றி பரிசீலிக்கலாம். இது ஒன்றும் அரசியல் அமைப்பு அல்ல' என்று தெரிவித்தார்.
ஆனால், இளைஞர் காங்கிரஸ் இணையதளத்தில், "நாட்டிலேயே உள்கட்சி தேர்தல் நடத்தும் ஒரே அரசியல் அமைப்பு இளைஞர் காங்கிரஸ்' என்று தெரிவித்துள்ளது. மாநிலத்தில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும், குறைந்தது 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் காமத் உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts