background img

புதிய வரவு

ரூ.50 ஆயிரம் கோடி செலவு செய்தோமா? அழகிரி

மதுரை : ""இத்தேர்தலில் வேட்பாளர் செலவு செய்ய வேண்டிய தொகையை காட்டிலும் குறைவாக தான் தி.மு.க., வேட்பாளர்கள் செலவு செய்திருக்கின்றனர்,'' என, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார். மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட முத்துப்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் ஓட்டளித்தார்.
பின் அவர் கூறியதாவது: தி.மு.க.,வினர் ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுப்பதாக அ.தி. மு.க.,வினர் கூறுகின்றனரே?
எப்போதுமே அப்படி தான் கூறுவர். தோல்வி பயத்தில் பலவற்றை கூறுகின்றனர். "நாங்கள் வன்முறையில் ஈடுபடுவோம்; பணம் கொடுக்குகிறோம்' என்று ஏதோதோ கூறுகின்றனர்.
தேர்தலில் தி.மு.க., 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
தேர்தல் கமிஷன் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். நாங்கள் எப்படி அவ்வளவு செலவு செய்திருக்க முடியும். ஒரு வேட்பாளர் செலவு செய்ய வேண்டிய தொகையை காட்டிலும் குறைவாக தான் செலவு செய்திருக்கிறோம்.
தேர்தல் பிரசாரத்தில் ஊழல் பெரிய விஷயமாக...
(இடைமறித்து) எங்கள் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறோம். 200 இடங்களில் வெற்றி பெறுவோம். அவர்கள் எந்த சாதனையும் செய்யவில்லை. கருணாநிதி குடும்பத்தை மட்டும் தான் குறை கூறுகின்றனர்.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல்...
(இடைமறித்து) "2ஜி'யும் கிடையாது. "1ஜி'யும் கிடையாது.
தி.மு.க., தலைவர்களை ஜெயலலிதா அதிக விமர்சனம் செய்கிறாரே?
அவருக்கு கொள்கை எதுவும் கிடையாது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பழிவாங்கும் என்று கூறுவார். அவர் சொல்வதை தான் பத்திரிகைகள் பெரிதுபடுத்துகின்றன.
தி.மு.க., மீது அதிகம் குற்றம் சாட்டப்படுகிறதே?
தேர்தல் கமிஷன் அ.தி. மு.க.,வுக்கு ஆதரவாக, மதுரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் செயல்படுகிறது. தி.மு.க., கூட்டணி தோற்க வேண்டுமென்று அவர்கள் வேலை பார்க்கின்றனர்.
கருத்து கணிப்பு பற்றி?
அதெல்லாம் சும்மா. தென் மாவட்டங்களில் குறைந்தது 40 முதல் 45 இடங்களில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அழகிரி கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts