background img

புதிய வரவு

அதிருப்தி வேட்பாளர்கள் சோனியா கடும் சூடு

புதுடில்லி:"சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு யாரும் சவால்விட கூடாது' என, அதிருப்தி வேட்பாளர்களை, கட்சியின் "சந்தேஷ்' பத்திரிகையில் தலைவர் சோனியா கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரின் நேரத்தை வீணடித்த எதிர்க்கட்சியினரையும் சாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின், "சந்தேஷ்' பத்திரிக்கையின், முதல் பக்கத்தில், அக்கட்சி தலைவர் சோனியா தலையங்கம் எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது:தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில், கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு யாரும் சவால்விட கூடாது. ஒவ்வொருவருக்கும் சீட் வழங்க முடியாது. கட்சியின் முடிவை, இறுதி முடிவாக எடுத்து கொள்ள வேண்டும். கட்சியினர் யாரும் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்க்க கூடாது. கட்சியால் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு, கட்சி தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்.போதிய பார்லிமென்ட் ஜனநாயக அக்கறையின்மையால், பட்ஜெட் நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்தனர்.

பட்ஜெட் கூட்டம் முக்கியமானது. பல்வேறு அமைச்சகங்களுக்கு, திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதுகுறித்து பார்லிமென்டில் வாதம் செய்யப்படும். ஆனால், உண்மையில் அது நடக்காதது வருத்தம் அளிக்கிறது. தொடர்ந்து பார்லிமென்ட் கூட்டத்தை ஒத்திவைத்து, ஏன் மக்களின் வரி பணம் வீணடிக்கப்பட்டது என்பதற்கு, மக்களுக்கு பா.ஜ., கட்சி விளக்கம் அளிக்க வேண்டும்.பொருட்கள் மற்றும் சேவை வரி உட்பட அனைத்து அம்சங்களும் பட்ஜெட்டில் நல்ல முறையில் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக கொண்டு வரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவை வரி சட்டம், மாநிலங்களுக்கு இடையில், பொருட்கள் மற்றும் சேவைகளை எளிதில் மாற்றி கொள்ள உதவும். முன்பு இருந்த சிக்கல்கள் களையப்படும்.இவ்வாறு சோனியா எழுதியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts