background img

புதிய வரவு

50 ஆயிரம் குடும்பங்களுக்கு ஜப்பானில் நஷ்ட ஈடு தர முடிவு

டோக்கியோ : புக்குஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, அணு மின் நிலையத்தை இயக்கி வரும் "டெப்கோ' நிறுவனம், தலா ஐந்தரை லட்சம் ரூபாய் தற்காலிக இழப்பீடாக உடனடியாக வழங்க வேண்டும் என்று ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.

புக்குஷிமா டாய் இச்சி அணு மின் நிலையத்தில் பாதிக்கப்பட்ட அணு உலைகளில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சால், 50 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு வெளியேறுவது தெரிந்த உடன், 30 கி.மீ., சுற்றளவில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற ஜப்பான் அரசு உத்தரவிட்டது. ஆனால், வெளியேற இயலாதவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். அவர்கள் தங்கள் வீடுகளின் கதவுகள், ஜன்னல் கதவுகள் ஆகியவற்றை மூடி பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அணு மின் நிலையத்தைச் சுற்றி 30 கி.மீ., பரப்பளவில் இருந்த பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா, ஐந்தரை லட்சம் ரூபாயை, அணு மின் நிலையத்தை இயக்கி வரும், "டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி' தற்காலிக இழப்பீடாக உடனடியாக வழங்க வேண்டும் என்று ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, "டெப்கோ' தலைவர் மசாடாகா ஷிமிஷு கூறுகையில், "ஆட் குறைப்பு மற்றும் வெளிநாட்டுத் திட்டங்கள் குறைக்கப்பட்டு, அவற்றின் மூலம் சேமிக்கப்படும் பணத்தில் இழப்பீடு வழங்கப்படும். இழப்பீடு வழங்குவதில் பின்வாங்க மாட்டோம்' என்று தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts