background img

புதிய வரவு

இன்னும் இரு ஆண்டுகளில் தனிக்கட்சி தொடங்குவார் ரஜினி! - சொல்கிறார் நிதின் கட்காரி

ரஜினி அரசியலுக்கு வருவாரா... தனிக்கட்சி துவங்குவாரா? இப்படி ரசிகர்கள் மனதில் எழும் கேள்விகள் நிறைய்ய...

இப்போது அந்தக் கேள்விகளுக்கான விடை கிட்டத்தட்ட கிடைத்திருப்பதாகவே அரசியல் வட்டாரத்தில் நம்புகிறார்கள். அடுத்த இரு ஆண்டுகளில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவிக்கப் போவதாகவும், தேசியக் கட்சியில் சேரும் திட்டம் இல்லை, தனிக்கட்சிதான் என்றும் தன்னிடம் ரஜினி கூறியதாக பாஜக தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

சென்னைக்கு வருகிறேன் என டெல்லியிலிருந்து ரஜினிக்கு தொலைபேசியில் தகவல் சொல்லிவிட்டே கிளம்பிய கட்காரியை (முன்பே செய்தி வெளியிட்டுள்ளோம்), வரவேற்று அழைத்துப் போன ரஜினி, அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாராம்.

அவரது அரசியல் பிரவேசம் குறித்து கேட்ட கட்காரியிடம், "இந்தத் தேர்தலில் மக்கள் முன் உள்ள வாய்ப்புகள் (அணிகள்) எதுவும் தனக்கு திருப்தி ஏற்படுத்தும் அளவுக்கு இல்லை, மூன்றாவதாக ஒரு சக்தி வரவேண்டும் என மக்கள் விரும்புவது தனக்கும் புரிந்துள்ளதாக," என்று கூறினாராம் ரஜினி. மக்களின் இந்த விருப்பம், எதிர்ப்பார்ப்பை தான் ஒருபோதும் தட்டிக்கழிக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக அரசியல் பற்றிக் கேட்டாலே மேலே கையை உயர்த்திக் காட்டுவது ரஜினி வழக்கம். ஆனால் கட்காரியிடம், "எனது கடைசி படத்துக்குப் பிறகு அரசியலில் ஈடுபடுவது குறித்து யோசிப்பேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது நடக்கும்" என்று கூறியுள்ளார்.

மேலும், நாட்டில் ஊழலுக்கெதிரான மனநிலை உருவாகியுள்ளது திருப்தியளிப்பதாகவும், ஊழலுக்கெதிராக அன்னா ஹஸாரே மேற்கொண்ட உண்ணாவிரதம் தன்னை வெகுவாக பாதித்ததாகவும் கூறியுள்ளார் ரஜினி.

நாட்டில் நிலவும் வறுமை, ஊழல், குடிநீர் பிரச்சினை மற்றும் சுற்றுச் சூழல் சீர்கேடு போன்றவை குறித்து தான் மிகவும் கவலைப்படுவதாகவும், இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உடனடியாக ஏதேனும் செய்தாக வேண்டும் என விரும்புவதாகவும் கட்காரியிடம் கூறியுள்ளார் ரஜினி.

சரி... ஏதேனனும் தேசியக் கட்சியில் சேருவாரா?

ம்ஹூம்... தமிழகத்தில் இப்போதும் தேசிய கட்சிகளை மக்கள் விரும்பவில்லை. எனவே தனிக்கட்சி துவங்குவது என்பதில் ரஜினி உறுதியாக உள்ளாராம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts