background img

புதிய வரவு

'தமிழ் சினிமா வரலாறு'... ரஜினி பாராட்டு!

தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள்: 1931 முதல் 2010 வரை' புத்தகத்தை எழுதிய தனஞ்செயனை நேரில் வழரவழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார் ரஜினி.

80 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான ஆயிரம் படங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறது தனஞ்செயன் தலைமையிலான ஒரு குழு.

தனஞ்செயன் முன்பு மோசர் பேர் நிறுவனத்தின் தமிழ்ப் படத் தயாரிப்புப் பிரிவில் தலைமை அதிகாரியாக இருந்தவர். பூ உள்ளிட்ட நான்கைந்து படங்களை அந்த நிறுவனம் தயாரித்த பிறகு, படத் தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இப்போது மோசர் பேரிலிருந்து விலகி யுடிவி நிறுவனத்தின் தென் இந்தியப் பிரிவின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்தப் புத்தகத்தை அண்மையில் கமல்ஹாஸன் வெளியிட்டது நினைவிருக்கலாம். இப்போது தனஞ்செயனை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார் ரஜினி.

ரஜினியை சந்தித்த பின் தனஞ்செயன் இப்படிக் கூறியுள்ளார்:

"இன்று என் வாழ்க்கையில் மறக்க முடியாத, மிகப் பெரிய நாள் இதுவே. ரஜினி சார் என்னைப் பாராட்டியதையும், அவரது சிலையைப் பரிசளித்ததையும் மறக்க முடியாது. அவர் உண்மையிலேயே மிகச் சிறந்த மனிதர். மனிதாபிமானி. அவரைப் போல எளிமையான ஒருவரை என் வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை. என் மனதை வென்றுவிட்டார் ரஜினி..." என்றார்.

இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ள இந்த ஆங்கிலப் புத்தகத்தின் விலை ரூ 3000. தமிழ்ப் பதிப்பு விரைவில் வரவிருக்கிறது. எம்ஜிஆர், ரஜினியின் படங்கள் பல இந்தப் புத்தகத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், ரஜினி பாராட்டுத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts