கோபி: தமிழ் மக்களிடம் ஓட்டுக் கேட்க குஷ்புவுக்கு என்ன தகுதியிருக்கிறது என்றார் நடிகர் சிங்கமுத்து.
நடிகர் சிங்கமுத்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து ஓட்டு கேட்டு வருகிறார். கோபியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையனை ஆதரித்து சிங்கமுத்து பேசுகையில், "தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் நல்ல மதிப்பை பெற்றுள்ளதாக இருந்தால் நீங்கள் ஏன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வருகிறீர்கள்.
கட்சி தொடங்கிய குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்து இன்று அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 41 சீட்டுகளை பெற்றுள்ளார் விஜயகாந்த். அவரைப்பற்றி தனிப்பட்ட முறையில் பேசி விமர்சிக்க எழுதப்படிக்க தெரியாத உனக்கு (வடிவேலுவுக்கு) என்ன தகுதி இருக்கிறது?
இதேபோல் தமிழகப் பெண்களின் கற்பை பற்றி தரக்குறைவாக பேசியவர் குஷ்பு. அப்படிப்பட்ட குஷ்புவுக்கு தமிழக பெண்களிடம் வந்து ஓட்டு கேட்க என்ன தகுதி இருக்கிறது?இந்தியை எதிர்த்தவர் கருணாநிதி. இன்று இந்தி பேசும் குஷ்பு தி.மு.கவுக்கு ஆதரவாக பேசுகிறார்.
தமிழக மக்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறார்கள். தமிழக மக்கள் எல்லா விவரமும் தெரிந்தவர்கள்தான்," என்றார்.

0 comments :
Post a Comment