background img

புதிய வரவு

அதிக தொகுதி கொடுக்க முடியவில்லை: வைகோவை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தேன்; ஜெயலலிதா பேட்டி

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோபி செட்டிப்பாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இடைவிடாத மின்வெட்டால் தொழில் வளர்ச்சியும், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தவறான ஆட்சி நடக்கிறது. அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பேரலை வீசுகிறது. தி.மு.க. மீது சூறாவளியாக மக்களின் கோபம் திரும்பியுள்ளது. என்னுடைய ஆட்சி காலத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதித்தேன். ஆனால் தற்போது கள்ளச்சந்தையில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. வைகோவுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவரை கூட்டணியில் சேர்க்க தேவையான முயற்சிகளை மேற்கொண்டேன். 12 தொகுதிகள் வரை ஒதுக்க முன் வந்தேன். ஆனால் அவர் அதிகம் எதிர்பார்த்ததால் அவருடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை.

நான் ஏற்கனவே கூறியதை போல அவர் மீதான மதிப்பும், மரியாதையும் எப்போதும் உண்டு. எனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் 12 வழக்குளில் நான் குற்றமற்றவர் என்று நீதி மன்றம் தெரிவித்து உள்ளது. அதனால் மேம்பாக்காக என் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதை மறுக்கிறேன். நான் ஊழல் செய்யவில்லை. என் கட்சியும் ஊழல் செய்ய வில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னாஹசாரேவுக்கு என் முழு ஆதரவு உண்டு.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா தேவை என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அனைத்து சட்டங்களையும் நிலைநாட்ட மத்தியில் ஒரு வலிமையான அரசும், ஒரு வலிமையான பிரதமரும் இருக்க வேண்டும். ஆனால் தற்போது நம்மிடம் உள்ள பிரதமர் மவுனமாக இருக்கிறார். எதையும் செயல்படுத்த முடியாமல் செயலற்று போய் உள்ளார்.

தேச நலனில் அக்கறை இல்லாமல் உள்ளார். இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மட்டுமன்றி தேச பாதுகாப்புக்கும் ஒற்றுமைக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் மத்தியில் நமக்கு ஒரு வலிமையான அரசும் வலிமையான பிரதமரும் தேவை.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts