மும்பை: இந்தியா-பாக். அணிகள் மோதின அரையிறுதிப் போட்டியை பாலிவுட் பாதுஷா ஷாருக் கான் மன்னத்தில் உள்ள தனது இல்லத்தில் நண்பர்களுடன் கண்டு ரசித்தார். இறுதிப் போட்டியிலும் இந்தியா தான் வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார்.
வரும் சனிக்கிழமை மும்பையில் உள்ள வாங்கடே அரங்கில் இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடக்கிறது. இதை ஷாருக் கான் தனது குடும்பத்தோடு அரங்கில் வந்து கண்டு ரசிக்கவிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
நாம் தான் இறுதிப் போட்டியிலும் வெல்வோம். அதற்காக நான் ஒரு எக்ஸ்ட்ரா டி சர்ட் வாங்கி வைத்திருக்கிறேன். அதை அணிந்து கொண்டு தான் நான் மும்பை அரங்கிற்கு சென்று இறுதி ஆட்டத்தை காணவிருக்கிறேன். என் குழந்தைகளும் ஆட்டத்தைப் பார்க்க ஆவலாக இருக்கின்றனர்.
சிறந்த வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது. சச்சின் தான் இந்திய அணிக்கு உற்சாகம் அளிப்பவர். 85 ரன்கள் என்பது சிறந்த ஸ்கோர். அவருக்கு அவ்வளவு நெருக்கடி கொடுக்கக் கூடாது.
அரையிறுதி ஆட்டத்தை ஷாருக் கான் கரன் ஜோஹார், பர்ஹான் அக்தர். சூசன் ரோஷன், கரிஷ்மா கபூர், சஞ்சய் கபூர், ரவீனா, அர்ஜுன் ராம்பல், பிரத்தீக் பாபர், சங்கி பாண்டே மற்றும் பலருடன் சேர்ந்து தனது இல்லத்தில் பார்த்தார்.
அரையிறுதி ஆட்டத்தில் ஆட்ட நாயகன் சச்சின் டெண்டுல்கர் தனது 100-வது சர்வேதச சதத்தை 15 ரன்களில் நழுவவிட்டார்.

0 comments :
Post a Comment