background img

புதிய வரவு

யானை முகாம் நடத்தியதே ஜெவின் சாதனை-ஈவிகேஎஸ்

சென்னை & விழுப்புரம்: ஜெயலலிதா இதற்கு முன் ஐந்தாண்டுகளில் மக்களைப் பற்றி கவலைப்படவே இல்லை; மாக்களைப்பற்றிதான் சிந்தித்தார். யானைகளுக்கு முகாம் நடத்தியதுதான் அவரது சாதனை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் சேகர் பாபுவை ஆதரித்து புதுவண்ணாரப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், திமுக ஆட்சி தமிழகத்தில் தொடர்வது காலத்தின் கட்டாயம். மக்களுக்கு தேவையானதைச் செய்யும் ஆட்சியை மாற்றிவிடக்கூடாது. காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, பொருளாதார நிபுணர்கள் சாத்தியமே இல்லை என்றனர். ஆனால், காமராஜர் சாதித்துக் காட்டினார்.

அதுபோல் கலைஞர் இலவச டிவி என்று அறிவித்தபோது, நானே நம்பவில்லை. நிபுணர்களும் சாத்தியமில்லை என்றனர். கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் சொன்னபடி இலவச டிவி வழங்கினார்.

ஜெயலலிதா இதற்கு முன் ஐந்தாண்டுகளில் மக்களைப் பற்றி கவலைப்படவே இல்லை; மாக்களைப்பற்றிதான் சிந்தித்தார். யானைகளுக்கு முகாம் நடத்தியதுதான் அவரது சாதனை.

கலைஞரை நான் பலமுறை விமர்சித்துள்ளேன் என்பது வேறு விஷயம். ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். மக்களுக்குத் தேவையான திட்டங்களை
செயல்படுத்தினார்.

என் சுயமரியாதைதான் முக்கியம், ஏழை-எளிய மக்களைப்பற்றி கவலையில்லை என்கிற ஜெயலலிதாவை ஆட்சியில் அமர வைத்தால், நடந்து வரும் திட்டங்களும் முடங்கிப் போகும். வரவேண்டிய நல்ல புதிய திட்டங்களும் வராமல் போய்விடும். யார் பெரியவர் என்ற போட்டியால் தமிழகத்தில் வளச்சி தடைபடும்.

தமிழகத்துக்கு நல்லது செய்யும் இந்த ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் கேட்கும் திட்டங்களை எல்லாம் மத்திய அரசு தரும். என்னைப் பொறுத்தவரை உதயசூரியன், கை சின்னங்கள் வேறு வேறு அல்ல என்றார்.

விஜய்காந்த் டெபாசிட் வாங்கக் கூடாது:

இதற்கிடையே விழுப்புரத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடந்த திமுக கூட்டணி பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

நேரத்தின் அருமை கருதி உங்களிடத்தில் 3 செய்தியை மட்டும் நான் சொல்கிறேன். 1996ல் இதே இடத்தில் பாமக ஒரு மிகப்பெரிய மாநாட்டை போட்டு நமது கலைஞரை அழைத்து அடுத்த முதல்வர் நீங்கள் தான் என்று ஒரு தனி நாற்காலி போட்டோம். 7 கட்சி கூட்டணியோடு இருந்து அப்போது 96ல் முதல்வராக வந்தார். இது ஒரு செய்தி.

அடுத்து நிபந்தனையற்ற ஆதரவை கொடுப்போம் என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறேன். மே 13ம் தேதி வாக்கு எண்ணும்போது முதல் முறையாக கவர்னரிடம் திமுக தலைவர் கலைஞரை ஆட்சி அமைக்க அனுப்புகிற முதல் கடிதம் இந்த ராமதாசிடம் இருந்து தான் செல்லும்.

அமைச்சர் போட்டியிடுகிற இந்த தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். எனக்கு மட்டும் ஒரு நாள் நேரம் இருந்தால் நான் ஒவ்வொரு கிராமம், கிராமமாக சுற்றி சுற்றி வந்திருப்பேன். இந்த தொகுதியில் எதிர்த்து நிற்கிற வேட்பாளர் டெபாசிட் வாங்கக்கூடாது.

இன்னொரு செய்தி ரிஷிவந்தியம் தொகுதியில் சிவராஜை எதிர்த்து நிற்கிற அந்த வேட்பாளரும் (தேமுதிக தலைவர் விஜய்காந்த்) டெபாசிட் வாங்கக்கூடாது என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts