background img

புதிய வரவு

தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு: விஜயகாந்த், தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

சென்னை: இந்திய ராணுவத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த விஜயகாந்தின் தேமுதிகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் கேட்டு விஜயகாந்திற்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேமுதிகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி டி.எஸ். ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

கடந்த மாதம் 24-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தேர்தல் குறித்து உங்கள் வியூகம் என்ன என்று கேட்டதற்கு, கார்கில் போர் நடந்தபோதும் சரி, பாகிஸ்தானுடன் மோதும்போதும் சரி ராணுவத்தினர் என்ன திட்டம்போட்டா எதிர்கொண்டனர். எந்த நேரத்தில் எது நடக்க வேண்டுமோ அது நடக்கும் என்று கூறினார்.

இந்த பேச்சு இந்திய இறையாண்மைக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானது. எனவே தேமுதிகவின் தேர்தல் ஆணைய பதிவு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அந்த முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து இன்னும் 4 வார காலத்திற்குள் பதில் அளி்க்குமாறு விஜயகாந்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts