background img

புதிய வரவு

பைனலில் "ராமர்-ராவணன் போர்' * இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு

மும்பை: பாகிஸ்தானுக்கு எதிராக மொகாலியில் நடந்த "மகாயுத்தத்தில்' இந்திய அணி வெற்றி பெற்றது. அடுத்து, இலங்கையுடன் நடக்க உள்ள பைனலை "ராமர்-ராவணன்' இடையிலான "போராக' ரசிகர்கள் வர்ணிக்கின்றனர்.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று முன் தினம் மொகாலியில் நடந்த அரையிறுதியில் "பரம எதிரிகளான' இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. உலக "மகாயுத்தமாக' கருதப்பட்ட இப்போட்டியில், அபார வெற்றி பெற்ற இந்திய அணி, பைனலுக்கு முன்னேறியது.
நாளை மும்பையில் நடக்க இருக்கும் பைனலில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இதனை "ராமர்-ராவணன்' போராக இந்திய ரசிகர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான எஸ்.எம்.எஸ் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதில்,""நாளை ராமர்(இந்தியா), ராவணன்(இலங்கை) இடையே போட்டி நடக்க உள்ளது. இதில், ராவணனை வதம் செய்து சீதாவை(உலக கோப்பையை) ராமர் கொண்டு வருவார்,''என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள ராமர் கோயில்களில் இந்திய அணியின் வெற்றிக்காக நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இது குறித்து ரசிகர் ஒருவர் கூறுகையில்,""இலங்கைக்கு எதிராக வெற்றி பெற பகவான் ராமர் அருள் புரிய வேண்டும். ராமாயணத்தில் இவர் தான் இலங்கையை வீழ்த்தியுள்ளார்.,''என்றார்.
ரசிகர்கள் விருப்பத்துக்கு ஏற்ப தோனி தலைமையிலான இந்திய அணி இம்முறை உலக கோப்பை வென்று வரலாறு படைக்க நாமும் பிரார்த்திப்போம்.
-----------
பலிக்குமா "எம்' மந்திரம்
இந்திய அணிக்கு இம்முறை "எம்' மந்திரம் கைகொடுக்கிறது. அதாவது ஆங்கில எழுத்தான "எம்' என்று துவங்கும் இடங்கள் அல்லது மைதானங்களில் நடந்த போட்டிகளில் வென்றுள்ளது. உதாரணமாக, மிர்புர்(எதிர், வங்கதேசம்), எம்.ஏ.சின்னசாமி அரங்கம்(எதிர், அயர்லாந்து), எம்.ஏ. சிதம்பரம்(எதிர்,வெ.இண்டீஸ்), மொடிரா(எதிர், ஆஸி.,), மொகாலி(எதிர், பாக்.,) ஆகிய இடங்களில் வெற்றிவாகை சூடியுள்ளது. பைனல் நடக்க உள்ள மும்பையின் பெயரும் "எம்' என்ற எழுத்தில் தான் துவங்குகிறது. இதனால், இந்திய அணி கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ளது. தவிர, மகேந்திர சிங் தோனி என்ற பெயரும் "எம்' என்ற எழுத்தில் தான் துவங்குகிறது. இம்முறை பங்கேற்றுள்ள கேப்டன்களில் இவரது பெயர் மட்டுமே "எம்' என்ற எழுத்தில் துவங்குவது சிறப்பம்சம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts