background img

புதிய வரவு

காம்பிர் அதிரடி: கோல்கட்டா அணி வெற்றி *ராஜஸ்தான் ராயல்ஸ் ஏமாற்றம்

ஜெய்ப்பூர்: கேப்டன் காம்பிர், காலிஸ் தூள் கிளப்ப, கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் ஏமாற்றிய ஷேன் வார்ன் அணி, தொடரில் முதல் தோல்வியை பதிவு செய்தது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று ஜெய்ப்பூரில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
வாட்சன் வருகை:
ராஜஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. அஜின்கியா ரகானே, டெய்ட் நீக்கப்பட்டு ஷேன் வாட்சன், நயன் தோஷி வாய்ப்பு பெற்றனர். கோல்கட்டா அணியில் டசாட்டே, ஜெய்தேவ் உனத்கட் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக பிரட் லீ, சாகிப் அல் ஹசன் தேர்வு செய்யப்பட்டனர்.
டிராவிட் ஆறுதல்:
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு அமித் பவுனிகர் (9) மோசமான துவக்கம் அளித்தார். பின் இணைந்த டிராவிட், மேனரியா ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் கோல்கட்டா பவுலர்கள் திணறினர். இந்நிலையில் கேப்டன் காம்பிர், யூசுப் பதானை பந்துவீச அழைத்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. யூசுப் பதான் வீசிய ஆட்டத்தின் 12வது ஓவரின் 3வது பந்தில் டிராவிட் (35) போல்டானார். அதே ஓவரின் 5வது பந்தில் மேனரியா (27), யூசுப் பதானிடம் "கேட்ச்' கொடுத்து வெளியேறினார்.
டெய்லர் அதிரடி:
பின் இணைந்த வாட்சன், ராஸ் டெய்லர் ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. சமீபத்திய வங்கதேச தொடரில் சிக்சர் மழை பொழிந்த வாட்சன், நேற்று பெரிய அளவில் சோபிக்கவில்லை. இவர், 13 பந்தில் 2 சிக்சர் உட்பட 22 ரன்கள் எடுத்து, சாகிப் சுழலில் போல்டானார். மறுமுனையில் அதிரடி காட்டிய டெய்லர், பாலாஜி வீசிய ஆட்டத்தின் 16வது ஓவரில் இரண்டு "சிக்சர்' விளாசினார். இவருக்கு ஜோகன் போத்தா ஒத்துழைப்பு அளித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. டெய்லர் (35), போத்தா (12) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் சாகிப் அல் ஹசன், யூசுப் பதான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
காம்பிர் அபாரம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு, மன்வீந்தர் பிஸ்லா (1) "ரன்-அவுட்டாகி' ஏமாற்றினார். பின் இணைந்த காலிஸ், காம்பிர் ஜோடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய காம்பிர், ஐ.பி.எல்., அரங்கில் தனது 9வது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த காலிஸ், ஐ.பி.எல்., அரங்கில் தனது 13வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதிரடியாக ரன் குவித்த இந்த ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 18.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. காலிஸ் (80 ரன்கள், 65 பந்து), காம்பிர் (75 ரன்கள், 44 பந்து) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகனாக கோல்கட்டா அணியின் கேப்டன் காம்பிர் தேர்வு செய்யப்பட்டார்.
"ஹாட்ரிக்' அரைசதம்
நேற்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோல்கட்டா அணியின் காலிஸ், 65 பந்தில் 80 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம், இம்முறை தொடர்ந்து மூன்று போட்டிகளில் அரைசதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக இவர், சென்னை (54), டெக்கான் (53) அணிகளுக்கு எதிராக அரைசதம் கடந்தார்.
* இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில், அதிக அரைசதம் கடந்த வீரர்கள் வரிசையில் காலிஸ், தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இதுவரை இவர், 45 போட்டிகளில் பங்கேற்று 13 அரைசதம் அடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் தலா 9 அரைசதம் அடித்துள்ள சச்சின் (மும்பை), காம்பிர் (கோல்கட்டா+டில்லி), ரெய்னா (சென்னை) ஆகியோர் உள்ளனர்.
---
ஸ்கோர் போர்டு
ராஜஸ்தான் ராயல்ஸ்
பவுனிகர் (கே)காலிஸ் (ப)சாகிப் 9(15)
டிராவிட் (ப)யூசுப் 35(34)
மேனரியா (கே)+(ப)யூசுப் 27(21)
வாட்சன் (ப)சாகிப் 22(13)
டெய்லர் -அவுட் இல்லை- 35(25)
போத்தா -அவுட் இல்லை- 12(12)
உதிரிகள் 19
மொத்தம் (20 ஓவரில், 4 விக்.,) 159
விக்கெட் வீழ்ச்சி: 1-26(பவுனிகர்), 2-78(டிராவிட்), 3-79(மேனரியா), 4-124(வாட்சன்).
பந்துவீச்சு: பிரட் லீ 4-0-29-0, பாலாஜி 4-0-31-0, காலிஸ் 4-0-31-0, சாகிப் 4-0-31-2, பட்டியா 1-0-12-0, அப்துல்லா 2-0-14-0, யூசுப் 1-0-4-2.
கோல்கட்டா நைட்ரைடர்ஸ்
பிஸ்லா -ரன் அவுட்-(பசால்/பவுனிகர்) 1(3)
காலிஸ் -அவுட் இல்லை- 80(65)
காம்பிர் -அவுட் இல்லை- 75(44)
உதிரிகள் 4
மொத்தம் (18.3 ஓவரில், ஒரு விக்.,) 160
விக்கெட் வீழ்ச்சி: 1-8(பிஸ்லா).
பந்துவீச்சு: மேனரியா 2-0-18-0, அமித் சிங் 2.3-0-26-0, வாட்சன் 2-0-18-0, தோஷி 2-0-23-0, போத்தா 2-0-13-0, வார்ன் 4-0-28-0, திரிவேதி 4-0-34-0.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts