background img

புதிய வரவு

காலை இழந்த கால்பந்து வீராங்கனை ஓடும் ரயிலில் கொள்ளையர் அட்டகாசம்

பெரெய்லி: ஓடும் ரயிலில் இருந்து கால்பந்து வீராங்கனையை, கொள்ளையர்கள் வெளியே தள்ளி விட்டுள்ளனர். அப்போது, எதிரே வந்த ரயில் அவரது கால் மீது ஏறிச் சென்றதால், இடது காலை பரிதாபமாக இழந்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி கால்பந்து வீராங்கனை சோனு என்ற அருணிமா சின்கா(23). இவர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். வாலிபால் போட்டிகளிலும் பங்கேற்ற அனுபவம் இவருக்கு உண்டு. வேலை வாய்ப்பு தேடி, பரீட்சை எழுத லக்னோவில் இருந்து "பத்மாவதி எக்ஸ்பிரஸ்' மூலம் டில்லி சென்றுள்ளார். உ.பி.,யில் உள்ள பெரெய்லி மற்றும் செனாடி இடையே ரயில் சென்ற போது, சில கொள்ளையர்கள் சோனுவை சூழ்ந்து கொண்டுள்ளனர். அவரது கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது சோனு தடுக்க, ஆத்திமடைந்த கொள்ளையர்கள், அவரை பிடித்து ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளி விட்டுள்ளனர்.
தண்டவாளத்தில் விழுந்த நிலையில், அவரை துரதிருஷ்டம் துரத்தியுள்ளது. எதிர் திசையில் மின்னல் வேகத்தில் வந்த மற்றொரு ரயில் சோனுவின் கால்கள் மீது ஏறிச் சென்றுள்ளது. இதில், இடது முழங்காலுக்கு கீழே துண்டிக்கப்பட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது. உடனே அருகில் இருந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இடது காலை அகற்ற வேண்டிய பரிதாப நிலைமை ஏற்பட்டது.
இது குறித்து அருணிமா கூறுகையில்,""எனது தங்கச் செயினை பறிக்க கொள்ளையர்கள் முயன்றனர். இதனை தடுத்த போது, என்னை ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளி விட்டனர். தண்டவாளத்தில் விழுந்த என்னால் எழுந்திருக்க முடியவில்லை. எதிரே வந்த ரயில் எனது கால் மீது ஏறிச் சென்றது,''என்றார்.
இது குறித்து மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகன் கூறுகையில்,""இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும்படி ரயில்வே துறையை கேட்டுக் கொண்டுள்ளோம். சோனுவுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்,''என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts