background img

புதிய வரவு

உடல்நிலை தேறியது: சாய்பாபாவுக்கு மேலும் 2 நாட்கள் செயற்கை சுவாசம்; டாக்டர்கள் முடிவு

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக பணியில் ஈடுபட்டு வருபவர் சத்யசாய்பாபா (85). இவர் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த மாதம் 28-ந்தேதி அங்குள்ள ஸ்ரீசத்யசாய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இன்று 13-வது நாளாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவரது உடல்நிலை தேறியது. சிறுநீரகம் நன்றாக இயங்கத் தொடங்கி உள்ளது.

இதுபற்றி ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் சபயா கூறும்போது,

சாய்பாபாவின் அனைத்து உறுப்புகளும் நன்றாக இயங்குகிறது. சிறுநீரக செயல்பாடும் நல்ல நிலையில் உள்ளது. அவருக்கு அவ்வப்போது மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. 2 நாட்கள் செயற்கை சுவாசம் இதனால் அவருக்கு மேலும் 2 நாட்கள் செயற்கை சுவாசம் அளிக்க முடிவு செய்துள்ளோம். இந்த 2 நாளில் அவரது சுவாசத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால் செயற்கை சுவாச கருவியை அகற்றி விடுவோம். அவர் விரைவில் முழுமையாக குணமாகி விடுவார் என்று நம்புகிறோம் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts