background img

புதிய வரவு

தமிழகத்தை குடும்ப அரசியல் பாடாய் படுத்துகிறது-நரேந்திர மோடி

ஓசூர்: ஊழலை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்டசபை தேர்தலையொட்டி ஓசூரில் பாஜக சார்பில் போட்டியிடும் பாலகிருஷ்ணனை ஆதரித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது,

நாட்டின் சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றாலும் நாடு முழுவதும் அதே பேச்சு தான். நாட்டில் தற்போது அனைவரும் ஊழலை பற்றியே தான் விவாதம் செய்கின்றனர். இளைய சமுதாயத்தினர் ஊழலை எதிர்த்து போராடத் துவங்கியுள்ளனர். நான் குஜராத்தில் இருக்கையில் கடந்த 1975-ம் ஆண்டில் அப்போதைய இளை சமுதாயத்தினர் ஊழலை எதிர்த்து போராடியதால் அந்த அரசு அகற்றப்பட்டது. மக்களின் போராட்டம் மூலமாக மட்டும் தான் ஊழல் அரசை அகற்ற முடியும். அதற்காக நமக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஊழல் அரசியல்வாதிகளை அகற்றாவிட்டால் முன்னேற்றம் கிடையாது.

தற்போதைய அரசியல் சூழலில் எதுவும் நடக்கும் என்ற நிலை உள்ளது. நான் 3-வது முறையாக குஜராத் முதல்வராக உள்ளேன். அங்கு சிறு குற்றங்கள் கூட கிடையாது. ஊழல் இல்லாத அரசு நடத்த முடியும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுத்த முடியும் என்று கொண்டு வந்து முன் உதாரணமாக எனது மாநிலத்தை வைத்துள்ளேன்.

தமிழகத்தை ஊழல் ஒரு பக்கம், குடும்ப அரசியல் மறு பக்கம் பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. இவற்றை உடனே அகற்ற வேண்டும்.

தமிழகத்தில் பாஜக அமோக வெற்றி பெறுமா என்று கேட்கிறார்கள். ஒரு மனிதன் நினைத்தால் கூட மாற்றத்தை கொண்டு வர முடியும். அதற்கு சிறந்த உதாரணம் அன்னா ஹசாரே. ஊழலை எதிர்த்து தனி மனிதராய் போராடி வரலாறு படைத்துள்ளார். நீங்கள் பாலகிருஷ்ணனை தேர்ந்தெடுத்தால் ஊழலை அகற்ற முடியும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.

ஊழலை எதிர்த்து போராடுபவன் நான். இங்குள்ள அரசு மக்களுக்கு குடிநீர் கொடுக்கவில்லை ஆனால் டிவி கொடுக்கிறது. டிவியைப் பார்த்தால் தாகம் தீர்ந்து விடுமா?

குஜராத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் பஞ்சம் இருந்தது. நிலத்தடி நீர் ஆதாரம் இல்லை. ஆனால் இன்று அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் வெளிப்படையான, ஊழலற்ற, நேர்மையான நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் வளர்ச்சி என்றாலும், விமர்சினம் என்றாலும் குஜராத்தை குறிப்பிடுகிறார்கள். அன்னா ஹசாரே போன்று நாம் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கத் தேவையில்லை.

மாறாக வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிப்பதன் மூலம் ஊழலை ஒழி்க்க முடியும். தமிழகத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்து வாக்களியுங்கள் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts