background img

புதிய வரவு

சிறப்பு வக்கீல் நியமனம்: ஸ்பெக்ட்ரம் வழக்கை தினசரி நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தனிக்கோர்ட்டில் நடந்து வரும் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையை ஒத்திவைப்பு ஏதுமின்றி தினசரி நடத்துமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் ஆட்சேபணையையும் மீறி, இந்த வழக்கின் சிறப்பு அரசு வக்கீலாக யு.யு.லலித்தை நியமிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.


ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான எந்த மனுவையும் எந்த கோர்ட்டும் விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்றும், அத்தகைய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


ஸ்பெக்ட்ரம் வழக்கில், வருகிற 24ந் தேதி துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. தெரிவித்தது. இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணையை 26ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts