background img

புதிய வரவு

என்னையும் ராஜாவாக்கியது கலைஞர்தான் : நெப்போலியன்

மத்திய அமைச்சரும், மாஜி நாயகருமான நெப்போலியனுக்கு ஒரு படம் முழுக்க ராஜா வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாம். அவரது ஆசை ஒருசில காட்சிகளில் கமல் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி மூலம் தசாவதாரம் படத்தில் ஓரளவு நிறைவேறியது என்றாலும், ஒரு முழுப்படத்திலும் ராஜாவாக வாழ முடியாத வருத்தம் இருந்து கொண்டே இருக்கிறதாம். அந்த வருத்தத்தை பொன்னர் - சங்கர் படத்தின் மூலம் அப்படத்தின் கதை- வசனகர்த்தா முதல்வர் கருணாநிதிதான் தீர்த்து வைத்திருக்கிறார்.
இதுபற்றி நெப்போலியன் கூறுகையில், முதல்வருக்கு ரொம்ப பெரிய மனது. சாதாரண நடிகரான என்னை எம்.எல்.ஏ. ஆக்கி அழகு பார்த்தார் தலைவர். அப்புறம் எம்.பி. ஆக்கி, மந்திரி ஆக்கியுள்ளார். இதெல்லாம் நிஜத்தில் என்றால், பொன்னர் - சங்கர் கதையை சினிமா படமாக்க, திரைக்கதையாக்கி தர வேண்டும் என்று தியாகராஜன் கேட்டதுமே அதற்கு சம்மதித்த கலைஞர், அதில் வரும் ராஜா பாத்திரத்தை நெப்போலியன்தான் ஏற்று நடிக்க வேண்டும், என்று தனது விருப்பத்தை சொல்லியிருக்கிறார். அவர் ஆசைப்படியே நான் பொன்னர் - சங்கரின் ராஜாவாகவும் உயர்ந்து நிற்கிறேன், என்றார். நெப்ஸை பொருத்தவரை முதல்வர் கருணாநிதிக்கு பெரிய மனசுதானே! (ஸ்பெக்டரம் ராசாவுக்கும்; இந்த ராஜாவுக்கும் சம்மந்தமே இல்லீங்க)

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts