background img

புதிய வரவு

நந்திதா தாஸ்க்கு செவாலியர் விருது

நடிகையாக இருந்து டைரக்டராக மாறியவர் நந்திதா தாஸ். உள்ளூர் விருது முதல் வெளிநாட்டு விருதுகள் வரை பல பெற்ற நந்திதாவுக்கு மேலும் ஒரு கவுரவம் கிடைத்திருக்கிறது. இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான சினிமாவை மேம்படுத்தியதற்காக பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியர் விருது வழங்கி நந்திதா தாசை கவுரவித்துள்ளது பிரான்ஸ் அரசு.

தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், விஸ்வ துளசி போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், உருது என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பயர், எர்த், பவந்தர் உள்ளிட்ட பல்வேறு படங்கள் நந்திதா தாஸ்க்கு பெயர் பெற்று தந்தன. நடிகையாக இருந்த நந்திதா ஃபிராக் படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதரித்தார். நந்திதா இந்தியாவின் பல்வேறு மாநில விருதுகளை பெற்றுள்ளார். இதுதவிர கெய்ரோ, ‌மேட்ரிட் உள்ளிட்ட நகரங்களில் நடந்த விழாக்களிலும் விருது பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு கவுரத்தை வழங்கி இருக்கிறது பிரான்ஸ் அரசு. பிரான்ஸ் அரசின் மிக உயரிய விருதான செவாலியர் விருது நந்திதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே சினிமாவை மேம்படுத்தியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு தூதர் ஜெரோம் போனோஃபான்ட் இவ்விருதை நந்திதா தாஸ்க்கு வழங்கினார்.

விருதுவென்றது குறித்து நந்திதா கூறியதாவது, ஒவ்யவாரு முறையும் விருது பெறும்போது, எனக்கு ஒரு புதுஅனுபவத்தை தருகிறது. என்னுடைய உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக இதை கருதுகிறேன். மூன்று வருடத்திற்கு முன்பே இவ்விருது கிடைக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் கிடைக்காமல் ‌போய்விட்டது. இப்போது பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts