background img

புதிய வரவு

என்னை கவர்ந்த விக்ரம்: அனுஷ்கா

தெய்வத்திருமகன் படத்தில் விக்ரமின் நடிப்பை பார்த்து பிரமித்து போய்விட்டேன். இந்திய அளவில் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை இப்படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்து இருக்கிறார் என்று வெகுவாக பாராட்டுகிறார் அனுஷ்கா.

மதராசப்பட்டினம் படத்தின் மூலம் பிரபலமான டைரக்டர் விஜய், அடுத்து விக்ரமை வைத்து தெய்வத்திருமகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரமுடன் அனுஷ்கா, அமலாபால், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் மன வளர்ச்சி குன்றிய இளைஞராக நடிக்கிறார். படத்தில் விக்ரமின் நடிப்பை பார்த்து பிரமித்து போய் இருக்கிறார் அனுஷ்கா.

இதுகுறித்து அனுஷ்கா கூறியதாவது, இந்தபடத்தில் விக்ரமின் நடி‌ப்பை பார்த்து பிரமித்து போய்விட்டேன். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் படும் சிரமங்கள் நேரில் பார்த்து ஆச்சரியப்பட்டேன். தான் மட்டுமல்ல தன்னுடன் நடிப்பவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டினார். என்னுடைய சினிமா வாழ்வில் இப்படி நடிக்கணும் என்று யாரும் இதுவரை சொல்லிக் கொடுத்ததில்லை. படத்தில் அவருடைய நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. இந்தபடம் விக்ரமிற்கு நிச்சயம் பல விருதுகளை பெற்று தரும். இந்திய அளவில் அவர் தலைசிறந்த நடிகர். விக்ரம் மட்டுமல்ல இந்தபடத்தில் என்னை கவர்ந்த இன்னொரு விஷயம் ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையும் தான். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts