background img

புதிய வரவு

யாரையும் நான் பிரசாரத்தில் திட்ட மாட்டேன்-ராதிகா

நாங்குநேரி பிரசாரத்தின்போது இன்று நடிகர், நடிகையர் பிறரைத் திட்டி வருகின்றனர். ஆனால் நான் யாரையும் திட்ட மாட்டேன் என்று கூறியுள்ளார் நடிகை ராதிகா.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெற்று தென்காசி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது.

தென்காசியில் நடிகர் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணனும் போட்டியிடுகின்றனர். சரத்குமாரை ஆதரித்து அவரது மனைவி ராதிகா தென்காசி தொகுதி முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று நாங்குநேரி தொகுதியில் நாராயணனை ஆதரித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், தற்போது நடிகர், நடிகைகள் பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் ஒருவரையொருவர் வசைமாரி பொழிகின்றனர்.

ஆனால் நான் யாரையும் திட்ட மாட்டேன். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முற்போக்கு சிந்தனையுடன் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதை எண்ணிப் பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில், யாரையும் வசை பாடாமல் நாகரீகமாக பிரசாரம் செய்து வரும் ஒரே நடிகை ராதிகா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts