background img

புதிய வரவு

நடிகை திரிஷாவுக்கும், வாக்காளருக்கும் தகராறு

நடிகை திரிஷாவின் வீடு, சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கிறது. அவர் ஓட்டுப்போடுவதற்காக, ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த ஓட்டுச்சாவடிக்கு, பிற்பகல் 1 மணிக்கு வந்தார். அவருடன் தாயார் உமா கிருஷ்ணன், பாட்டி சாரதா ஆகியோரும் வந்தார்கள்.

அப்போது அந்த வாக்குச்சாவடியில் கூட்டம் குறைவாகவே இருந்தது. திரிஷா தனது தாயார், பாட்டி ஆகியோருடன் கியூவில் நிற்காமல், நேராக ஓட்டுப்போடும் அறையை நோக்கி சென்றார்.

உடனே, கியூவில் நின்ற ஒரு வாக்காளர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். கியூவில் நின்று ஓட்டுப்போடும்படி திரிஷாவிடம் கூறினார். அதை பொருட்படுத்தாமல் திரிஷா, ஓட்டுப்போடும் அறைக்குள் செல்ல முயன்றார்.


அப்போது திரிஷாவுக்கும், எதிர்ப்பு தெரிவித்த வாக்காளருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் ஆங்கிலத்தில் திட்டிக்கொண்டார்கள்.


எதிர்ப்பு தெரிவித்த வாக்காளர் அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ் அதிகாரியிடம் சென்று, திரிஷா மீது புகார் செய்தார். எல்லோரும் கியூவில் நின்று ஓட்டுப்போடும்போது, திரிஷா மட்டும் நேராக சென்று ஓட்டுப்போடலாமா?'' என்று கேட்டார்.


உடனே அந்த போலீஸ் அதிகாரி, புகார் செய்த வாக்காளரிடம் அடையாள அட்டையை காண்பிக்கும்படி கேட்டார். அவர் அடையாள அட்டையை காண்பித்ததும், போலீஸ் அதிகாரி திரிஷாவிடம் சென்று, உங்கள் பாட்டி மூத்த குடிமகள் என்பதால், அவர் கியூவில் நிற்க தேவையில்லை. ஆனால் நீங்களும், உங்கள் தாயாரும் கியூவில் நின்று ஓட்டுப்போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


அதன்பிறகு திரிஷாவும், அவருடைய தாயாரும் சுமார் 20 நிமிடங்கள் கியூவில் நின்று ஓட்டுப்போட்டார்கள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts