background img

புதிய வரவு

முட்டைக்கோஸ் சப்பாத்தி

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்
முட்டைக்கோஸ் துருவல் - ஒன்றரை கப்
புதினா - சிறிதளவு
இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
நெய், எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முட்டைக் கோஸை மெல்லியதாக துருவிக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், புதினாவையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.

இதனுடன் உப்பு, இஞ்சித் துருவல் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.

கோதுமை மாவுடன் வதக்கிய காய்களைச் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து ஒன்றரை மணி நேரம் ஊற விடவும்.

மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி மேல் மாவு தூவி சற்று கனமாக இடவும்.

சூடான தோசைக் கல்லில் போட்டு இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

சிறிது நெய் விட்டு சிவந்த புள்ளிகள் தோன்றும் வரை வேகவிட்டு எடுக்கவும்.

சட்னி அ‌ல்லது பச்சடியுடன் பரிமாறினால் நன்றாக இருக்கும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts