தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக மாறியுள்ள நடிகர் வடிவேலுவுக்கு எதிராகவும், போட்டியாகவும், நடிகர் சிங்கமுத்துவை களமிறக்குகிறது தே.மு.தி.க., கட்சி.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் நடிகர், நடிகைகளை பிரசாரம் செய்ய ஈடுபடுத்தி வருகிறது. தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது ஏற்கனவே விஜயகாந்தின் மீதுள்ள கோபத்தை எல்லாம் தன்னுடைய பிரசாரத்தில் காட்டி வருகிறார். திருவாரூரில் முதல்வர் கருணாநிதி பங்கேற்ற கூட்டத்தில் பிராசரத்தை ஆரம்பித்த வடிவேலு, விஜயகாந்தை மிகவும் கீழ்தரமாக பேசினார். அதுமட்டுமல்லாமல் பிரசாரத்திற்கு போகும் ஒவ்வொரு இடத்திற்கும் அவரை வசைபாடி வருகிறார். வடிவேலுவின் இந்தபேச்சு மிகவும் கீழ்த்தரமாக இருந்தாலும் அவரது பேச்சை கேட்கவும் நிறைய கூட்டம் கூடுகிறதாம்.
இந்நிலையில் வடிவேலுவுக்கு நிகராக தே.மு.தி.க.,விலும் ஒருவரை களமிறக்க அந்தகட்சி திட்டமிட்டது. அதன்படி யாரை அழைக்கலாம் என்ற நிலையில், வடிவேலுவின் மாஜி நண்பரும், தற்போது எதிரியுமான நடிகர் சிங்கமுத்துவை களமிறக்க இருக்கிறது அந்தகட்சி. இதுதொடர்பாக சிங்கமுத்துவிடம் தே.மு.தி.க., கட்சியினர் அணுகியபோது அவரும் ஓ.கே., சொல்லியிருக்கிறார். அத்துடன் சினிமாவில் வடிவேலுவை காமடியனாகத்தான் பார்த்திருக்கிறீர்கள், அவருக்கு இன்னொரு முகவும் இருக்கிறது. அந்த முகத்தை பிரசாரத்தின்போது நிச்சயம் தோலுறித்து காட்டத்தான் போகிறேன் என்று கூறிவருகிறார் சிங்கமுத்து. நாளை அல்லது நாளை மறுதினம் முதல் தனது பிரசாரத்தை துவங்க இருக்கிறார் சிங்கமுத்து.

0 comments :
Post a Comment