background img

புதிய வரவு

தேர்தல் கமிஷனிடம் நடிகர் கார்த்திக் புகார்

சென்னை:""என் கட்சி வேட்பாளர்கள் மூவரை அ.தி.மு.க.,வினர் துப்பாக்கிமுனையில் மிரட்டியுள்ளனர். ஒரு வேட்பாளரை விலைக்கு வாங்கி விட்டனர்,'' என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் புகார் கூறினார்.இது குறித்து சென்னையில் நேற்று நிருபர்கள் சந்திப்பில் கார்த்திக் கூறியதாவது:எங்கள் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி, 27 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருந்தது. இதில், எட்டு பேர் வாபஸ் பெற்று விட்டனர். தற்போது எனது கட்சியை சேர்ந்த 19 பேரும், நாங்குநேரி மற்றும் திருநெல்வேலி தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிடும் இருவரும் சேர்ந்து, எனது கட்சியின் சார்பில் 21 பேர் போட்டியிடுகின்றனர்.எனது கட்சியின் சார்பில் கம்பம் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரன், போடி வேட்பாளர் அறிவரசன், உசிலம்பட்டி வேட்பாளர் வீரண்ணராஜு ஆகியோர் ராயப்பேட்டையில் ஒரு தனியார் லாட்ஜில் தங்கியிருந்தனர்.இவர்களை, அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் இரு தினங்களுக்கு முன், ஸ்கார்பியோ காரில் கடத்தி துப்பாக்கிமுனையில் மிரட்டி, வாபஸ் வாங்கச் சொல்லியுள்ளனர். இதில், அறிவரசன் அவர்களுடன் சேர்ந்து விட்டார். ரவிச்சந்திரனையும், வீரண்ணராஜுவையும் திருச்சி - திண்டுக்கல் இடையே மிரட்டி இறக்கி விட்டுள்ளனர். மிரட்டப்பட்ட வேட்பாளர்கள் மூலம் தேர்தல் கமிஷனருக்கு புகார் கொடுக்க உள்ளோம்.
நான் நாகரிகமாக அரசியல் நடத்த விரும்புகிறேன். சிலர் அநாகரிக அரசியல் நடத்துகின்றனர். வேட்பாளர்களை மிரட்டலாம், என்னை மிரட்டி பணிய வைக்க முடியாது. இனி இருக்கும் எனது வேட்பாளர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. எனது வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து இன்று பிரசாரத்தை துவங்குகிறேன். ஒரு நாளைக்கு இரண்டு தொகுதிகள் வீதம் பிரசாரம் செய்ய உள்ளேன்.எனது கட்சி போட்டியிடாத தொகுதிகளில் உள்ள எனது கட்சியை சேர்ந்தவர்கள், அவர்கள் இஷ்டத்திற்கு யாருக்கு வேண்டுமென்றாலும் ஓட்டளிக்கலாம். அவர்கள் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று என்னை கேட்டால், நான் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்கலாம் என்று தான் சொல்வேன். இவ்வாறு கார்த்திக் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts