background img

புதிய வரவு

தேர்தல் கமிஷன் விளம்பரத் தூதர் தோனி

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் செளரவ் கங்குலிக்கு பதிலாக தற்போதைய கேப்டன் தோனியை தனது விளம்பரத் தூதராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே. அப்துல் கலாமையும் தனது விளம்பரத் தூதராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

முன்னதாக கங்குலியின் அரசியல் நடுநிலைமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதால் பிரச்சாரத்தில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு கங்குலி கடிதம் எழுதியிருந்தார்.

சில அரசியல் சர்ச்சைகளில் தன்னை சிக்கவைப்பது தொடர்பாக கங்குலி மன வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

அவரது வேண்டுகோளை ஏற்று அவரை வெளியேற்ற தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி சுனில் குப்தா தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts