background img

புதிய வரவு

தி.மு.க., ஆட்சி தொடர்வது காலத்தின் கட்டாயம்: இளங்கோவன் பிரசாரம்

சென்னை: ""தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் தொடர்வது காலத்தின் கட்டாயம். மத்திய அரசுடன் இணக்கமான ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு நல்லது,'' என, இளங்கோவன் பேசினார்.
சென்னை ராயபுரம் தொகுதி காங்., வேட்பாளர் மனோவை ஆதரித்து, ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் திறந்த ஜீப்பில் வீதிவீதியாகச் சென்று பிரசாரம் செய்தார். பின்னர் ஆர்.கே.நகர் தொகுதியில் சேகர்பாபுவை (தி.மு.க.,) ஆதரித்து புதுவண்ணாரப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இளங்கோவன் பேசியதாவது: தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் தொடர்வது காலத்தின் கட்டாயம். மக்களுக்கு தேவையானதைச் செய்யும் ஆட்சியை மாற்றிவிடக்கூடாது. காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, பொருளாதார நிபுணர்கள் சாத்தியமே இல்லை என்றனர். ஆனால், காமராஜர் சாதித்துக் காட்டினார். அதுபோல் கருணாநிதி இலவச "டிவி' என்று அறிவித்தபோது, நானே நம்பவில்லை. நிபுணர்களும் சாத்தியமில்லை என்றனர். கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் சொன்னபடி இலவச "டிவி' வழங்கினார். ஜெயலலிதா இதற்கு முன் ஐந்தாண்டுகளில் மக்களைப் பற்றி கவலைப்படவே இல்லை; மாக்களைப்பற்றிதான் சிந்தித்தார். யானைகளுக்கு முகாம் நடத்தியதுதான் அவரதுசாதனை.

கருணாநிதியை நான் பலமுறை விமர்சித்துள்ளேன் என்பது வேறு விஷயம். ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். மக்களுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்தினார். என் சுயமரியாதைதான் முக்கியம்; ஏழை,எளிய மக்களைப்பற்றி கவலையில்லை என்கிற ஜெயலலிதாவை ஆட்சியில் அமர வைத்தால், நடந்து வரும் திட்டங்களும் முடங்கிப்போகும். வரவேண்டிய நல்ல புதிய திட்டங்களும் வராமல் போய்விடும். யார் பெரியவர் என்ற போட்டியால் தமிழகத்தில் வளச்சி தடைபடும். தமிழகத்துக்கு நல்லது செய்யும் இந்த ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் கேட்கும் திட்டங்களை எல்லாம் மத்திய அரசு தரும். என்னைப் பொறுத்தவரை உதயசூரியன், கை சின்னங்கள் வேறு வேறு அல்ல. அதை உணர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் சேகர்பாபுவையும், ராயபுரம் தொகுதியில் காங்.,வேட்பாளரையும் வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts