background img

புதிய வரவு

இந்தியர்கள் குறுகிய மனசுக்காரர்கள் என்று அப்ரிதி கூறியது தவறு-ஹர்பஜன்

ஜலந்தர்: இந்தியர்கள் குறுகிய மனசுக்காரர்கள் என்று பாகிஸ்தான் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் ஷாஹித் அப்ரிதி கூறியது தவறு. அப்படி இருந்திருந்தால் இந்தியாவுக்கு அவரும், அவரது அணியினரும் வந்திருந்தபோது மக்கள் அன்பு காட்டியிருக்க மாட்டார்கள் என்று சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

அப்ரிதியின் பேச்சு குறித்து ஹர்பஜன் சிங் கருத்து தெரிவிக்கையில், இதற்கெல்லாம் கருத்து தெரிவிக்காமல் இருப்பதே நல்லது. கருத்து தெரிவிக்கக் கூடிய அளவில் அப்ரிதி பேசவில்லை.

இந்தியர்கள் குறுகிய மனசுக்காரர்களாக இருந்திருந்தால், இந்த அளவுக்கு இந்தியா வளர்ச்சி அடைந்திருக்காது. மேலும், இந்தியாவுக்கு அப்ரிதியும், அவரது அணியினரும் வந்திருந்தபோது, விளையாடியபோது இந்தியர்கள் இந்த அளவுக்கு அன்பு காட்டியிருக்க மாட்டார்கள் என்றார் ஹர்பஜன்.

பாகிஸ்தான் டிவிக்கு அளித்த ஒரு பேட்டியில், இந்தியர்கள் குறுகிய மனதுடையவர்கள். இந்திய மீடியாக்கள் நெகட்டிவாகவே பாகிஸ்தான் குறித்து எழுதி வருகின்றன, பேசி வருகின்ற என்று குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் நேற்று தான் அப்படிப் பேசவில்லை என்று மறுத்திருந்தார். இதற்குத்தான் இன்று ஹர்பஜன் பதிலளித்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts