background img

புதிய வரவு

உலகக் கோப்பையை நாட்டிற்கும், சச்சினுக்கும் அர்ப்பணித்த அணி: கனவு மெய்ப்பட்டது

மும்பை: கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி அதை நாட்டிற்கும், சச்சின் டெண்டுல்கருக்கும் அர்ப்பணி்த்தது.

நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி இலங்கையை தோற்கடித்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது.

கோப்பையை வென்றவுடன் இந்திய அணி வீரர்கள் சச்சினை தங்கள் தோளில் வைத்து மைதானத்தில் வலம் வந்தனர். தங்களுக்கு போராதரவு அளித்த ரசிகர்களுக்கும், சச்சினுக்கும் வீரர்கள் நன்றி தெரிவித்தனர்.

உலகக் கோப்பை என்பது ஒரு பெரிய விஷயம், இன்று நாங்கள் வென்றுவிட்டோம். இதை சச்சினுக்கு கொடுக்கிறோம். இது நான் விளையாடிய 3-வது உலகக் கோப்பை. இறைவனுக்கு நன்றி என்று ஆனந்தக் கண்ணீருடன் கூறினார் ஹர்பஜன் சிங்.

நான் விளையாடிய முதல் உலகக் கோப்பையிலேயே வெற்றி பெற்றுவிட்டோம். இதைவிட வேறு என்ன வேண்டும். இநத கோப்பையை இந்திய மக்களுக்கு அளிக்கிறோம். சச்சின் கடந்த 21 வருடங்களாக சுமையை தன் தோளில் சுமந்தார் இன்று நாங்கள் அவரை தோளில் வைத்து கொண்டாடினோம் என்றார் விராத் கோலி.

இதை நம்ப முடியவில்லை. இந்தியாவிற்காகவும், சச்சினுக்காகவும் இந்த உலகக் கோப்பையை எங்கள் அணி வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. இதை சொல்ல வார்த்தையே இல்லை என்றார் வெற்றி பெற்றவுடன் ஆனந்தக் கண்ணீர் விட்ட யுவராஜ் சிங்.

இந்த உலகக் கோப்பை தொடரில் அதிகமாக 21 விக்கெட் எடுத்தவர்கள் ஜாஹிர் கானும், பாகிஸ்தான் கேப்டன் ஷஹித் அப்ரிடியும் தான். நாங்கள் இந்த கோப்பையை வென்றே தீர வேண்டும் என்றிருந்தோம். நாங்கள் சச்சினுக்காக சந்தோஷப்படுகிறோம். அவர் நாட்டிற்காக எவ்வளவோ செய்திருக்கிறார். இந்த வெற்றியை இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என்றார் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த ஜாஹிர் கான்.

நேற்றைய ஆட்டத்தில் 97 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தவர் கௌதம் கம்பீர். எங்கள் கனவு நனவாகிவிட்டது. அனைத்து பெருமையும் சச்சினுக்கு தான். அவருக்காக நாங்கள் விளையாடினோம் என்றார் கம்பீர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts