background img

புதிய வரவு

ஜெகனின் சொத்து மதிப்பு 2009-ல் ரூ.77 கோடி, 2011-ல் ரூ.365 கோடி

ஐதராபாத்: ஆந்திர மாநிலத்தில் வரும் மே.8-ம் தேதி நடைபெறவுள்ள கடப்பா தொகுதி லோக்சபா எம்.பி இடைத்தேர்தலில் மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டியே (38) போட்டியிடுகிறார். ஆந்திராவில் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டியின் மகன் ஜெகன்மோகன்ரெட்டி காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடப்பா எம்.பி.யாக இருந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார். இவருடன் ‌தாயார் விஜயலெட்சுமி தனது புலிவெந்துலா எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து ஜெகன்ம‌ோகன்ரெட்டி கடந்த மார்ச் மாதம் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை துவக்கினார். இந்நிலையில் கடப்பா எம்.பி.தொகுதி, புலிவெந்துலா எம்.எல்.ஏ. தொகுதி இடைத்தேர்தல்கள் வரும் மே.8-ம் தேதி நடக்கிறது. இதில் ‌கடப்பா எம்.பி. தொகுதியில் போட்டியிட ஜெகன்மோகன் ரெட்டி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விபரங்களை ‌குறிப்பிட்டுள்ளார். அதில் மொத்தம் ரு. 365 கோடி சொத்து மதி்ப்பு உள்ளதாகவும், இதில் டி.வி. சானல் உள்பட பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். மேலும் முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதும்,பங்குதாரராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில் ஜெகன்மோகன் கடப்பா லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட போது இவரது சொத்து மதிப்பு ரூ. 77 கோடியாக இருந்தது. இரண்டே வருடங்களில் 5 மடங்கு உயர்ந்து ரூ.365 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது வருமான வரியாக ரூ. 84 கோடி வரை செலுத்தியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts