background img

புதிய வரவு

வெற்றி கிடைக்குமா: தி.மு.க., திடீர் சர்வே

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், தி.மு.க., வேட்பாளர்கள், பூத் ஏஜன்டுகள் மூலம் வெற்றி வாய்ப்பு குறித்து, ரகசிய சர்வே எடுத்து வருகின்றனர்.

கடந்த ஏப்.,13ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. தமிழகத்தில், 77.8 சதவீதம் ஓட்டு பதிவானது. 1967ம் ஆண்டு 76.57 சதவீதம் ஓட்டு பதிவானது தான் சாதனையாக இருந்தது. தற்போது, அது முறியடிக்கப்பட்டுள்ளது. மே 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. வெற்றி, தோல்வி குறித்து அறிந்து கொள்வதில் அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலானோர், பூத் ஏஜன்டுகள் மூலம், ரகசிய சர்வே எடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட வேட்பாளர் போட்டியிடும் தொகுதியில் உள்ள அனைத்து பூத்களிலும், ஏஜன்டுகளிடம் ஒரு பட்டியலை வழங்கியுள்ளனர். அதில், ஓட்டளிக்க தகுதியுடைய ஆண், பெண் வாக்காளர்கள், பதிவான ஓட்டு விவரம் ஆகிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், தி.மு.க.,வுக்கு சாதகமாக விழுந்த ஓட்டுகளை தனியாக பட்டியலிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின் இறுதியில், கருத்து என்று எழுதப்பட்டு, மூன்று கேள்விகளின் அடிப்படையில் புள்ளி விவரங்களை தொகுத்து வழங்குமாறு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேள்வி விவரம் வருமாறு:

* கட்சியினர் தன்னை மிகைப்படுத்திக் கொள்ள சிறிது அதிகமாக கூறியிருந்தால், மொத்த பதிவில் 1 சதவீதம் குறைத்துக் கொள்ளலாம்.

* சில ஊர்களில் பணம் காரணமாக மொத்த பதிவில், 1 சதவீதம் கூடலாம். அப்படியானால், தி.மு.க., என இருக்கலாம்.

* அ.தி.மு.க., கொஞ்சம் பணம், அரிசி என சில பகுதிகளில் கொடுத்ததால், அவர்களுக்கு கால் சதவீதம் ஓட்டு கூடலாம்.

மேற்கண்ட கணக்கீட்டின்படி, தமிழகத்தின் பல பகுதிகளில் தி.மு.க., வினர் ரகசியமாக சர்வே எடுத்து வருகின்றனர். ரகசிய சர்வேயில் தி.மு.க., வினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. தேர்தல் முடிந்த ஒரே நாளில், பல தொகுதிகளின் சர்வே முடிவடைந்துள்ளது. ஒரு சில தொகுதிகளில், ஏஜன்டுகள் மூலம், தொடர்ந்து சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு பறிபோவதாக கருதப்படும் பகுதிகளில், தி.மு.க.,வினர், ஒன்றுக்கு இரண்டு முறை சர்வே செய்து வருகின்றனர். தி.மு.க.,வைத் தொடர்ந்து, அதன் கூட்டணியில் உள்ள காங்., - பா.ம.க., உள்ளிட்ட கட்சியினரும், சர்வே பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். முக்கிய நிர்வாகிகள் மூலம் ஏஜன்டுகளிடம், வாக்காளர் பட்டியல், பதிவான ஓட்டு விவரம் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts