background img

புதிய வரவு

கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

கிணத்துக்கடவு போலீஸ் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நீதிபதி மற்றும் போலீசார் சிக்கலாம்பாளையம் வழியாக கேரளா செல்லும் சாலையில் வடபுதூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மினி லாரி வேகமாக வந்தது.

அதனை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால் மினி வேன் நிற்காமல் சென்றது. உடனடியாக இன்ஸ்பெக்டர் தனது மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று மினி லாரியை மடக்கினார்.

அப்போது அதில் இருந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். டிரைவர் அப்துல் ஜப்பார் போலீசில் பிடிபட்டார். அவர் கோவை போத்தனூரை சேர்ந்தவர். மினி வேனை போலீசார் சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 50 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது. அதனை கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து டிரைவர் அப்துல்ஜப்பார் கைது செய்யப்பட்டார். மினி லாரியும், கடத்தப்பட்ட ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவர் கோவை கரும்புக்கடையை சேர்ந்த தாவுத் என்பதும், அவர் தான் ரேஷன் அரிசியை கடத்தியதும் தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts